நல்ல வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி கடத்தப்பட்ட மூன்று பெண்கள் மீட்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு:வேலை ஆசை காண்பித்து, டில்லியிலிருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட, மூன்று பெண்கள் எலஹங்கா ரயில்வே நிலையத்தில் மீட்கப்பட்டனர்.டில்லியை சேர்ந்த, 20 வயதான இரண்டு இளம் பெண்கள், டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள்; 'இவென்ட் மேனேஜ்மென்ட்' எனப்படும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தில் பணியாற்றினர்.இவர்களின் உறவினரான, மற்றொரு இளம்பெண்

பெங்களூரு:வேலை ஆசை காண்பித்து, டில்லியிலிருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட, மூன்று பெண்கள் எலஹங்கா ரயில்வே நிலையத்தில் மீட்கப்பட்டனர்.

டில்லியை சேர்ந்த, 20 வயதான இரண்டு இளம் பெண்கள், டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள்; 'இவென்ட் மேனேஜ்மென்ட்' எனப்படும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தில் பணியாற்றினர்.இவர்களின் உறவினரான, மற்றொரு இளம்பெண் பட்டப்படிப்பு படிக்கிறார். இப்பெண்களுக்கு இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவன மேலாளர் அறிமுகமானார். இவர் பெங்களூரில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக, ஆசை காண்பித்தார்.

இதை நம்பிய பெண்கள், அவருடன் ஆகஸ்ட் 30ல் விமானத்தில் பெங்களூரு வந்தனர். நேர்முக தேர்வு இருப்பதாக கூறி, சந்திர சேகர லே --- அவுட்டில் உள்ள பேயிங் கெஸ்ட் மையத்துக்கு அழைத்து சென்று, அறைக்குள் அடைத்து வெளியில் பூட்டினார்.கட்டடத்தின் வெளியே ஆறு நபர்கள், குடிபோதையில் இருந்ததை கவனித்த பெண்கள், அபாயத்தில் சிக்கியதை உணர்ந்து கொண்டனர்.அதன்பின் எப்படியோ, அங்கிருந்தவர்களை ஏமாற்றி, தந்திரத்துடன் தப்பி எலஹங்கா ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

அங்கிருந்த ரயில்வே போலீசரிடம் நடந்ததை கூறினர். அப்பெண்களை போலீசார், மகளிர், குழந்தைகள் நல கமிட்டி பாதுகாப்பில் ஒப்படைத்தனர்.பெண்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்கின்றனர். அவர்களை ஏமாற்றி அழைத்து வந்த நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X