சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
'லஞ்சம் வாங்கினால், 'டிஸ்மிஸ்' என உத்தரவிட்டு செயல்படுத்தினால் சரியாகி விடுவர்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் 'அமெரிக்கை' வி. நாராயணன் அறிக்கை: அரசு அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு அதிகரித்தாலும், லஞ்சம் வாங்கும் குணம் மட்டும் மாறாது. நாய் வாலை நிமிர்த்தினாலும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சத்தின் மேல் உள்ள

பேச்சு, பேட்டி, அறிக்கை

'லஞ்சம் வாங்கினால், 'டிஸ்மிஸ்' என உத்தரவிட்டு செயல்படுத்தினால் சரியாகி விடுவர்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் 'அமெரிக்கை' வி. நாராயணன் அறிக்கை: அரசு அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு அதிகரித்தாலும், லஞ்சம் வாங்கும் குணம் மட்டும் மாறாது. நாய் வாலை நிமிர்த்தினாலும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சத்தின் மேல் உள்ள மோகம் மட்டும் தணியாது.

'அடுத்து பிற பெரிய ஜாதிகளும், தியாகிகள் பட்டியலுடன் வரும். அவர்களுக்கும் மணி மண்டபம் அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தமிழகம் முழுக்க மணி மண்டபங்களும், நினைவிடங்களும் தான் இருக்கும்...' என, வேதனை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: எனது கோரிக்கையை ஏற்று, 1987ல் நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரத்தில், 4 கோடி ரூபாயில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்த முதல்வருக்கு நன்றி.


'செயலர்கள் எழுதி கொடுத்ததை வாசித்திருப்பார். நீங்கள் சொல்லி விட்டதால் திருத்திக் கொள்வார்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
ஆங்கிலேயே கைக்கூலிகள் தான், முதல் சுதந்திர போரை, சிப்பாய் கலகம் என்று குறிப்பிட்டனர். அப்படியே நீங்களும் குறிப்பிடுவது வேதனையாக இருக்கிறது. எனவே, முதல் சுதந்திர போர் என குறிப்பிடுங்கள்.


'தமிழீழம், தமிழகம், திராவிடம் என்று தான் பேசுவீர்கள். இப்போது, காஷ்மீர் வரை சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே; தேசிய தலைவராக எண்ணமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
காஷ்மீரிய தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காக, தன் வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்டவரும், ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான சையது அலி ஷா கிலானி மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன்.

'அப்படியே, எத்தனை வேலைகள் புதிதாக உருவாகியுள்ளன என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்...' என, அறிவுறுத்தும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அறிக்கை
: நாட்டின் வேலையின்மை அதிகரித்து வருகிறது. ஆகஸ்டில் மட்டும், 15 லட்சம் இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். இது, கவலை அளிக்கக் கூடிய வகையில் உள்ளது.


'உண்மையாகத் தான் இருக்குமோ...' என சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய பிரமுகர் ராம் மாதவ் அறிக்கை:
இந்தியாவின் உதவியுடன் ஆப்கனின் காபூல் நகரிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த சிலர், 'இந்தியா பவுண்டேஷன்' அமைப்பு மூலம் என்னை சந்தித்தனர். அப்போது, அமெரிக்காவை எதிரியாக கொண்டால் பலத்த பாதிப்பு ஏற்படும்; நண்பராக ஏற்றுக் கொண்டால் மிகவும் அபாயகரமாகி விடும் என்றனர். உண்மை தானோ?

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X