பொது செய்தி

இந்தியா

19 ஆண்டுகளுக்கு பின் சாலை அமைக்கும் பி.டி.ஏ.,

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு:அஞ்சனாபுராவில் 19 ஆண்டுகளுக்கு பின் பி.டி.ஏ., சாலை அமைக்கிறது.இது தொடர்பாக, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அஞ்சனாபுரா லே -- அவுட்டில், பொது மக்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டுமனைகள் விற்கப்பட்டது. சரியான சாலை வசதியில்லாததால், வீடு கட்டுவதற்கு தொந்தரவு ஏற்பட்டது. சாலை அமைக்கும்படி வீட்டுமனைதாரர்கள் வேண்டுகோள்
 19 ஆண்டுகளுக்கு பின் சாலை அமைக்கும் பி.டி.ஏ.,

பெங்களூரு:அஞ்சனாபுராவில் 19 ஆண்டுகளுக்கு பின் பி.டி.ஏ., சாலை அமைக்கிறது.இது தொடர்பாக, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அஞ்சனாபுரா லே -- அவுட்டில், பொது மக்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டுமனைகள் விற்கப்பட்டது. சரியான சாலை வசதியில்லாததால், வீடு கட்டுவதற்கு தொந்தரவு ஏற்பட்டது. சாலை அமைக்கும்படி வீட்டுமனைதாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பி.டி.ஏ., பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. வீட்டுமனைகள் விற்பனை எண்ணிக்கை அதிகரித்ததால், தற்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படுகிறது.

எனவே அஞ்சனாபுராவில், 23 கோடி ரூபாய் செலவில், ஆறு முதல் 8 கி.மீ., சாலை அமைக்கப் படும். இது நான்கு வழி சாலையாக இருக்கும்.கனகபுராவிலிருந்து, கொட்டிகரே வழியாக அஞ்சனாபுரா லே --- அவுட் வரை, சாலை பணிகள் நடக்கும். இன்னும் ஒரு மாதத்துக்குள் டெண்டர் கோரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X