சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தி.மு.க., - அ.தி.மு.க., சங்கத்தினர் 'சிண்டிகேட்!'

Added : செப் 03, 2021
Share
Advertisement
தி.மு.க., - அ.தி.மு.க., சங்கத்தினர் 'சிண்டிகேட்!'''ஏலக்காய் டீ போடும் நாயரே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த அண்ணாச்சி, ''வாத்தியார்களுக்கே பாடம் எடுத்துட்டு போயிருக்காரு வே...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார்.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தமிழகத்துல பள்ளி, கல்லுாரிகளை எல்லாம் திறந்துட்டாங்கல்லா... முதல் நாள், திருப்பூர்ல ஒவ்வொரு

 டீ கடை பெஞ்ச்


தி.மு.க., - அ.தி.மு.க., சங்கத்தினர் 'சிண்டிகேட்!'



''ஏலக்காய் டீ போடும் நாயரே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த அண்ணாச்சி, ''வாத்தியார்களுக்கே பாடம் எடுத்துட்டு போயிருக்காரு வே...'' என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார்.
''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தமிழகத்துல பள்ளி, கல்லுாரிகளை எல்லாம் திறந்துட்டாங்கல்லா... முதல் நாள், திருப்பூர்ல ஒவ்வொரு பள்ளிக்கூடமா போய் கலெக்டர் வினீத் ஆய்வு செஞ்சாரு வே...

''நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு போனவர், வகுப்பு ஆசிரியர்களை அழைச்சு பாடம் எடுக்க ஆரம்பிச்சாரு... 'ஊரடங்கு சமயத்துல, மாணவர்கள் வீட்டுக்குள்ளயே முடங்கி கிடந்திருக்காவ... அதனால, மன அழுத்தத்துல இருப்பாங்க... முதல்ல, அவங்க மனசை லேசாக்குங்க... சில திருட்டு சம்பவங்கள்ல மாணவர்கள் ஈடுபட்டதா, போலீஸ்ல இருந்து எனக்கு தகவல்கள் வந்துச்சு...

''குற்றச் செயல்கள்ல ஈடுபடுறது, எதிர்காலத்தை கடுமையா பாதிக்கும்னு, அவங்களுக்கு கவுன்சிலிங் குடுங்க... அப்புறமா பாடங்களை நடத்துங்க'ன்னு நீண்ட, 'லெக்சர்' குடுத்துட்டு போனாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''கவுரவ பதவிகளை போட்டி போட்டு வாங்கியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் பகுதிகள்ல இருக்கிற அரசு பள்ளிகள்ல, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவிகளை, உள்ளூர் தி.மு.க.,வினர் போட்டி போட்டு வாங்கியிருக்காங்க பா...

''இதுக்கு, அந்தப் பள்ளிகள்ல அவங்க புள்ளைங்க படிக்கணும் அல்லது படிக்கிற புள்ளைகளின் 'கார்டியனா' இருக்கணும்... மது விற்பனை, குற்றச் செயல்கள் எதுலயும் ஈடுபட்டிருக்க கூடாதுன்னு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கு...

''ஆனா, அதை எல்லாம் கண்டுக்காம தி.மு.க., புள்ளிகள் பலர் இந்தப் பதவிகளை கேட்டு வாங்கி, ஆசிரியர்களை எல்லாம் கூப்பிட்டு விழா நடத்தி, பொறுப்பு ஏற்றிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''கட்சிக்கு கெட்ட பெயர் வரும்னு புகார் அனுப்பிட்டு இருக்காங்க...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சி தகவலா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஆமாம்... அ.தி.மு.க., ஆட்சியில, மின்வாரிய பணியாளர்கள் இடமாறுதல்ல, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவங்களுக்கு முன்னுரிமை தந்தாங்க... இப்ப, தி.மு.க., ஆட்சியில, இடமாறுதல்ல வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க முடிவு செஞ்சிருக்காங்க...

''ஆனா, அ.தி.மு.க., சங்கத்துல இருக்கிற சில நிர்வாகிகள், தங்களிடம் இடமாறுதல் கேட்டு வர்றவங்களை, தி.மு.க., சங்க நிர்வாகிகளிடம் அழைச்சுட்டு போய், இடமாறுதல் வாங்கி குடுத்துடுறாங்க... இதுல, ரெண்டு சங்கத்தினரும், 'சிண்டிகேட்' அமைச்சு செயல்படுறாங்க...

''இவங்களை மாதிரி நிர்வாகிகளால கட்சிக்கு தான் கெட்ட பெயர் வரும்னு, தொழிற்சங்கத்துல இருக்கிற நேர்மையான சிலர், அறிவாலயத்துக்கு புகார்களை தட்டி விட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X