சீக்ரெட் சிங்காரம்: மீண்டும் பழைய பல்லவி!| Dinamalar

சீக்ரெட் சிங்காரம்: மீண்டும் பழைய பல்லவி!

Added : செப் 03, 2021
Share
மீண்டும் பழைய பல்லவி!தோற்றாலும் வருத்தம் இல்லையாம். ஆனால், புல்லுக்கட்டு கட்சியில் 224 தொகுதியிலும் வேட்பாளரை களத்தில் இறக்கப்போவதா 'மாஜி' பிரதமரு அறிவிச்சிருக்காரு.இதில 50 சதவீதத்துக்கும் அதிகமா பெண்களுக்கு வாய்ப்பு தருவதா, மகளிர் மாநாட்டில் அவர் தெரிவிச்சு கைத்தட்டல் வாங்கிட்டாராம்.மாநிலம் முழுவதிலும் புல்லுக்கட்டு இருக்குதுன்னு வெளியே காட்டுறாங்களாம்.

மீண்டும் பழைய பல்லவி!

தோற்றாலும் வருத்தம் இல்லையாம். ஆனால், புல்லுக்கட்டு கட்சியில் 224 தொகுதியிலும் வேட்பாளரை களத்தில் இறக்கப்போவதா 'மாஜி' பிரதமரு அறிவிச்சிருக்காரு.இதில 50 சதவீதத்துக்கும் அதிகமா பெண்களுக்கு வாய்ப்பு தருவதா, மகளிர் மாநாட்டில் அவர் தெரிவிச்சு கைத்தட்டல் வாங்கிட்டாராம்.மாநிலம் முழுவதிலும் புல்லுக்கட்டு இருக்குதுன்னு வெளியே காட்டுறாங்களாம். இவங்க தயவு இல்லாமல் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாதுன்னு பழைய பல்லவியை பாடுறாங்க.

சொக்கிய அமைச்சரு!

மத்திய உள்துறை அமைச்சரு, தாவணகரே வந்தாரு; அவரை வரவேற்க ஸ்டேட் மந்திரிங்க பலப்பேரு ஆஜரானாங்க.அதிருப்தியில் இருந்த ஆனந்தமான சுற்றுலாத்துறை அமைச்சரை கட்டித்தழுவி அரவணைச்சாரு; 'நேரம் வரும்; உமக்கு எல்லாமே நல்லதே நடக்கும்'னு நல்லாசி வழங்கினாராம்.ஆனந்தமான மந்திரி மனங்குளிர்ந்து, 'எனக்கு நீங்க தான் காட்பாதர்'னு தலை வணங்கினாராம். ஒரே சந்திப்பில் சுற்றுலா துறைக்காரர் சொக்கிட்டாரு.

கரிசனம் காட்டியது ஏன்?

ஷிவமொகாவில் இருக்கிற சுதந்திர போராட்ட தியாகியை இதுவரைக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சரான மூத்தவரு, கண்டுகொண்டதே இல்லையாம்.திடீரென தியாகியை போய் சந்திச்சிருக்காரு. 90 வயதை தாண்டிய அந்த தியாகியின் சுதந்திரபோராட்ட தியாகங்களை, சிறை அனுபவங்களை கேட்டு மெய்மறந்து போனாராம்.தேவையான உதவிகளை செய்ய போவதாக உறுதி அளித்தாராம். ஊரக வளர்ச்சித்துறைகாரருக்கு தியாகி மீது இப்போதாவது கரிசனம் கிடைச்சிருக்குதேன்னு தியாகியோட குடும்பத்தினர் நன்றி சொன்னாங்க.

அறிவிப்பால் அங்கலாய்ப்பு!

அடுத்த அசம்பிளி தேர்தலுக்காக, இப்பவே கட்சிங்க தயாராகி வராங்க. இதில் பூ கட்சிக் காரங்க தற்போதைய சி.எம்., 'மாஜி' சி.எம்., ஆகிய 2 பேர் கொண்ட கூட்டு தலைமையில் தேர்தல் வேலைகளை கவனிக்கனும்னு மத்திய உள்துறை மினிஸ்டர் சொல்லிட்டாராம்.இது 'மாஜி' முதல்வரோட தீவிர ஆதரவு காரங்களுக்கு அதிர்ச்சியும், அதிருப்தியையும் உருவாக்கி இருக்காம்.அடுத்த ஆட்சியும் லிங்காயத் தான்னு இப்பவே புரிய வெச்சிட்டதால், ஒக்கலிக காரங்கள ஓரங்கட்ட வைக்றாங்களேன்னு அங்கலாய்க்கிறாங்க!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X