சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பாதிப்பை குறைக்கும் தடுப்பூசிகொரோனா தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ் செலுத்திய பின் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தாதவர்களுடன் ஒப்பிடுகையில் தீவிர பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது என 'தி லான்செட்' இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின் அது உடலில்

அறிவியல் ஆயிரம்
பாதிப்பை குறைக்கும் தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ் செலுத்திய பின் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தாதவர்களுடன் ஒப்பிடுகையில் தீவிர பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது என 'தி லான்செட்' இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின் அது உடலில் நீடித்திருக்கும் நாட்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதியாக குறைகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் வாய்ப்பையும் தடுப்பூசி தடுக்கிறது. எனவே தாமதிக்காமல் தடுப்பூசி செலுத்துவது சிறந்தது.

தகவல் சுரங்கம்
நீளமான தேசிய நெடுஞ்சாலை
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மிக நீளமானது 'என்.எச்., - 44'. இது நாட்டின் வடக்கில் யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தொடங்கி ஹரியானா, டில்லி, உ.பி., ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக கன்னியாகுமரியில் முடிகிறது. இது ஏற்கனவே இருந்த 'என்.எச்.,' 1ஏ, 1, 2, 3, 75, 26, 7 ஆகிய ஏழு தேசிய நெடுஞ்சாலைகளை பாதி அல்லது முழுமையாக ஒருங்கிணைத்து 'என்.எச்., 44' உருவாக்கப்பட்டது. இதன் துாரம் 4112 கி.மீ., இந்த ரோடு அதிகபட்சமாக தமிழகத்தில் தான் (627 கி.மீ.,) துாரம் செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X