கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் வாபஸ் பெறக்கோரிய மனு தள்ளுபடி

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை:கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை வாபஸ் பெறக்கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனு:கோவில்களில் பூஜை, சடங்குகள் மேற்கொள்வது, மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது. மத விஷயங்களில் அரசும், அறநிலையத்துறையும் தலையிடுவது மட்டுமின்றி, உரிமைகளையும் மறுக்கிறது. பழைய மரபுகள்,

சென்னை:கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை வாபஸ் பெறக்கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனு:கோவில்களில் பூஜை, சடங்குகள் மேற்கொள்வது, மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது. மத விஷயங்களில் அரசும், அறநிலையத்துறையும் தலையிடுவது மட்டுமின்றி, உரிமைகளையும் மறுக்கிறது. பழைய மரபுகள், சம்பிரதாயங்களை மாற்ற அரசு முயற்சிக்கிறது.

அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை அரசு அறிவித்து, பல கோவில்களில் துவக்கி உள்ளது. அதன் வாயிலாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் பல கோவில்களின் அர்ச்சகர்களை, மறைமுகமாக அறநிலையத்துறையினர் வற்புறுத்துகின்றனர். பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்களே இல்லை.

சீர்திருத்தம் என்ற பெயரில், புதிய நடைமுறைகளை அறநிலையத்துறை அறிமுகப்படுத்து கிறது. இது, சம்பந்தப்பட்ட மத பிரிவின் சுதந்திரத்தில் குறுக்கிடுவது போன்றது. மத சடங்குகளில் அரசு தலையிடுவது, மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி.எந்த அதிகாரத்தின் அடிப்படையில், அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கேட்டு, அரசுக்கு மனு அனுப்பினேன். அதற்கு உரிய விளக்கம் தரப்படவில்லை.

எனவே, கோவில்களில் பின்பற்றப்படும் மத நடைமுறைகளை மாற்றவோ, குறுக்கிடவோ கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை வாபஸ் பெறவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை தள்ளுபடி செய்து, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்தை பொறுத்தது; தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை; குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்த முடியாது என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.

அதற்கு முரணான நிலையை எடுக்க முடியாது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை; இவ்வழக்கில் தகுதியில்லை.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X