பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ.9,229 கோடி செலவு

Updated : செப் 05, 2021 | Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி :'கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில் இருந்து 9,229 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவேக் பாண்டே என்பவர் தகவல் கோரினார்.இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப
தடுப்பூசி கொள்முதல், ரூ.9,229 கோடி செலவு

புதுடில்லி :'கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில் இருந்து 9,229 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவேக் பாண்டே என்பவர் தகவல் கோரினார்.
இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:மார்ச் - ஜூலை வரையிலான காலகட்டத்தில் 4,410 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 கோடி 'டோஸ்' கோவிஷீல்டு மற்றும் ஏழு கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

ஒரு டோஸ் 157.50 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த 'பயோலாஜிக்கல் இ' என்ற நிறுவனம் தயாரிக்கும் 'கோர்பிவாக்ஸ்' தடுப்பூசியின் 30 கோடி டோசுக்கு, முன்பணமாக 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது.
இந்த தடுப்பூசி, செப்., - டிச., காலகட்டத்தில் பயன்பாட்டுக்கு வரும்.சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 37.5 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் செய்ய, ஜூலையில் 2,521.56 கோடி ரூபாய் முன்பணமாக அளிக்கப்பட்டுள்ளது.பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 28.5 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் செய்ய 897 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.

இவை, ஆக., - டிச., மாத காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தடுப்பூசி கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், இதுவரை 26.3 சதவீதமான 9,229 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இவை தவிர, ஜன., - பிப்., மாதங்களில் 6.6 கோடி டோஸ் தடுப்பூசிகள் கொள்முதலுக்கு 'பி.எம்., கேர்ஸ்' அறக்கட்டளை நிதியில் இருந்து 1,392 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X