கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட் வழக்கில் பழனிசாமியை விசாரிக்க கோரிய மனுவுக்கு பதில் தர உத்தரவு

Updated : செப் 05, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனுவுக்கு, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட்டுக்குள் புகுந்து கொள்ளையும்
கோடநாடு எஸ்டேட் வழக்கு, பழனிசாமி,விசாரிக்க ,மனுவுக்கு பதில் தர உத்தரவு

சென்னை கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனுவுக்கு, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட்டுக்குள் புகுந்து கொள்ளையும் அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் 2017 ஏப்ரலில் நடந்தது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் மரணம் அடைந்தார். முதலாவதாக குற்றம் சாட்டப்பட்ட சயானின் மனைவி மற்றும் குழந்தையும் விபத்தில் இறந்தனர். இந்த விபத்தில் படுகாயத்துடன் சயான் தப்பினார். நீலகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.



இந்நிலையில், வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி., முரளி ரம்பா, அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன். எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றவர்களை விசாரிக்க கோரியதை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தீபு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த டிரைவர் கனகராஜ் வாயிலாக, இவ்வழக்கில் முன்னாள் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக சயான் கூறியுள்ளார். வழக்கு விசாரணை அவசரகதியில் நடக்கிறது. சிலரை காப்பாற்றும் முயற்சியில் போலீசார் செயல்படுகின்றனர்.
கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்களின் விபரங்களை, சசிகலா, இளவரசியால் மட்டுமே தெரிவிக்க முடியும். வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. கூடுதலாக சிலரை விசாரிக்க கோருவதற்கான காரணங்களை விளக்கமாக கூற, மனுதாரருக்கு அறிவுறுத்தி, இம்மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்கும்படி, சோலுார்மட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-செப்-202115:16:30 IST Report Abuse
D.Ambujavalli காலம் காலமாக இதுதானே நடந்து வருகிறது திமிங்கிலம், சுறா எல்லாம் தப்பிவிடும், விலாங்கும், குட்டி நீங்களும் தான் தண்டனை பெரும் புழக்கடை வழியாக சென்று காலில் கையில் விழுந்து விலக்கு பெற்றுவிடுவார் இவ்வளவு திட்டம் போட்டு கொலை செய்தவர், தப்பிக்கும் வழிக்கு மட்டும் திட்டமிடாமலா இருப்பார்?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-செப்-202115:15:49 IST Report Abuse
Kasimani Baskaran மற்றப்படி யாருக்கும் லாபமில்லை.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
04-செப்-202114:10:56 IST Report Abuse
periasamy நிச்சயம் எடப்பாடி, சஜீவன், சுனில் போன்றவர்களை போலீஸ் விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால்தான் உண்மை வெளியில் வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X