மேற்கு வங்க தேர்தல் வன்முறை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோல்கட்டா:'மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகள் குறித்த எஸ்.ஐ.டி., விசாரணை, முன்னாள் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லுார் கண்காணிப்பின்கீழ் நடக்கும்' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்.,

கோல்கட்டா:'மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகள் குறித்த எஸ்.ஐ.டி., விசாரணை, முன்னாள் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லுார் கண்காணிப்பின்கீழ் நடக்கும்' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைகள் அரங்கேறின; அதில், 16 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடகோரி கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறையில் நடந்த கொலை, பலாத்காரம் உள்ளிட்டவை குறித்து மட்டும் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.

வன்முறையின் இதர சம்பவங்களை விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில், 'முன்னாள் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லுார் கண்காணிப்பின்கீழ் இந்த எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கும்' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X