வ.உ.சி., விருது: ராமதாஸ் வரவேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., விருது: ராமதாஸ் வரவேற்பு

Added : செப் 03, 2021
Share
சென்னை:வ.உ.சி., பெயரில் விருது, அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் என, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.அவரது அறிக்கை:வ.உ.சிதம்பரம் பிள்ளையின், 150வது ஆண்டு பிறந்த தின விழா ஒட்டி, அவரது பெயரில் விருது வழங்கப்படும். அயோத்திதாச பண்டிதரின், 175வது ஆண்டு விழா ஒட்டி, வட சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற, இரு

சென்னை:வ.உ.சி., பெயரில் விருது, அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் என, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

அவரது அறிக்கை:வ.உ.சிதம்பரம் பிள்ளையின், 150வது ஆண்டு பிறந்த தின விழா ஒட்டி, அவரது பெயரில் விருது வழங்கப்படும். அயோத்திதாச பண்டிதரின், 175வது ஆண்டு விழா ஒட்டி, வட சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற, இரு அறிவிப்புகளையும், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இரு தலைவர்களையும் பெருமைப்படுத்தும் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.வ.உ.சி., அயோத்திதாச பண்டிதரின் வரலாறு களை, தமிழ் சமுதாயம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், வ.உ.சி.,யின், 150வது ஆண்டு விழாவை, வரும், 5ம் தேதி துவங்கி, ஓராண்டுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், அயோத்திதாச பண்டிதரின், 175வது ஆண்டு நிறைவடைந்து விட்டாலும் கூட, அதையும் கொண்டாட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ராமதாசின் மற்றொரு அறிக்கை:

பாரா ஒலிம்பிக் போட்டிகளில். உயரம் தாண்டுதல் பிரிவில், இந்திய வீரர் பிரவீன்குமார், புதிய ஆசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். துப்பாக்கிச் சுடும் போட்டிகளில், இந்திய வீராங்கனை அவனி லெகாரா, இரண்டாவது பதக்கம் வென்றுள்ளார். இருவருக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X