ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி:  இந்தியாவுக்கு புது அச்சுறுத்தல்

Updated : செப் 05, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (7+ 5)
Share
Advertisement
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை துவக்கியவர்களில் ஒருவரான முல்லா பராதர் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது. இது தொடர்பாக தலிபான் அமைப்பினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் 'ஜிகாத்' பட்டியலில் ஜம்மு - காஷ்மீரை, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு சேர்த்துள்ளதால் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடான
ஆப்கான், தலிபான்கள்  ஆட்சி,ஜிகாத் பட்டியல் இந்தியா,  அச்சுறுத்தல்

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை துவக்கியவர்களில் ஒருவரான முல்லா பராதர் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது. இது தொடர்பாக தலிபான் அமைப்பினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 'ஜிகாத்' பட்டியலில் ஜம்மு - காஷ்மீரை, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு சேர்த்துள்ளதால் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து, அந்த நாடு முழுதும் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஆப்கனில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

இது தொடர்பாக காபூலில் தலிபான் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அங்கு எந்த மாதிரியான ஆட்சி அமைக்கப்படும் என்பதை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.இந்நிலையில், தலிபான் அமைப்பை முல்லா ஒமருடன் இணைந்து துவக்கிய முல்லா பராதர் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க தலிபான்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் அமைப்பை நிறுவிய முல்லா ஒமரின் மகன் முகமது யாக்கூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டன்க்ஜாய் ஆகியோர் முக்கிய பொறுப்பில் இருப்பர் என தெரிய வந்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் இருக்கும் நிர்வாகம் போல் ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க தலிபான்கள் முடிவு செய்துள்ளனர்.

தலிபான்களின் உயர் மட்டத் தலைவர் ஒருவர் அரசியல் மற்றும் மதரீதியான கொள்கைகளுக்கு பொறுப்பாளராக இருந்து அதிபருக்கும் மேலாக செயல்படுவார். அந்த பதவியை தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவுக்கு வழங்க, முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கனில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் ஆட்சி அமைக்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தற்போது அமைய உள்ள தற்காலிக அரசில் தலிபான்கள் மட்டுமே இடம் பெற உள்ளனர். 25 பேர் அமைச்சர்களாக இருப்பர் என தெரிய வந்துள்ளது.

ஆறு அல்லது எட்டு மாதத்துக்கு பின் ஒருமித்த அரசு அமைக்கவும் தலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கனில் அரசு அமைக்க உள்ள தலிபான்களுக்கு கடும் சவால்களும் காத்திருக்கின்றன. கடும் பொருளாதார நெருக்கடியிலும், உணவு பஞ்சத்திலும் ஆப்கானிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. உலக நாடுகள் உதவி செய்தால் மட்டுமே இந்த நெருக்கடியை ஆப்கனால் சமாளிக்க முடியும்.ஆனால் 1990களில் இருந்தது போன்ற கொடூரமான ஆட்சியை தலிபான்கள் மீண்டும் அரங்கேற்றுவர் என அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. இதனால் நிதியுதவி வழங்க இந்த நாடுகள் தயக்கம் காட்டும்.


புனிதப் போர்



ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்- - குவைதா வெளியிட்ட அறிக்கையில், 'உலகில் அடுத்தவர்கள் ஆதிக்கத்தில் உள்ள இஸ்லாமிய நிலங்களை மீட்க 'ஜிகாத்' எனப்படும் புனிதப் போர் நடத்த வேண்டும்' என கூறியிருந்தது. இஸ்லாமிய நிலங்கள் என அவர்கள் குறிப்பிட்டிருந்த பகுதிகளில் நம் நாட்டின் ஜம்மு -- காஷ்மீரும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், மேற்காசியாவில் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உலக நாடுகளுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் முஸ்லிம்களை உங்கள் சொந்த மக்களாக கருதுங்கள். உங்கள் சட்டப்படி அனைத்தையும் பெற முஸ்லிம்களுக்கும் உரிமை உள்ளது. நாங்களும் முஸ்லிம் என்பதால் காஷ்மீர் உட்பட உலகளவில் முஸ்லிம்கள் எங்கு வசித்தாலும் அவர்களின் பிரச்னைக்கு ஆதரவாக குரல்கொடுப்போம். அதே சமயம் எந்த நாட்டிற்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.



இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:சமீபத்தில் கத்தாரில் உள்ள இந்திய துாதர் தீபக் மிட்டல், தலிபான் அரசியல் தலைவர் ஷெர் முகமது அப்பாசுடன் பேச்சு நடத்தினார்.


எச்சரிக்கை



அப்போது இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என, தீபக் மிட்டல் வலியுறுத்தினார். அதை, ஷெர் முகமது அப்பாஸ் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பில் ஆப்கனில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவது மற்றும் பயங்கரவாத பிரச்னை குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. தற்போது இதற்குத்தான் இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது. தலிபானுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். அல் - குவைதாவின் ஜிகாத் பட்டியலில் காஷ்மீர் சேர்க்கப்பட்டுள்ளதும், காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தலிபான்கள் குரல் கொடுத்துள்ளதும் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக, அரசியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.


'சீனா தான் முக்கிய பங்காளி'



ஐரோப்பிய நாடான இத்தாலியில் வெளியாகும் 'லா ரிபப்ளிக்கா' என்ற பத்திரிகைக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:ஆப்கனை கட்டமைப்பதில் சீனா தான் எங்களின் முக்கிய பங்காளி. அவர்களுடனான இணக்கமான போக்கு எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை திறந்து வைக்கும். எங்கள் நாட்டில் முதலீடு செய்ய சீனா தயாராக உள்ளது. நாட்டில் வளமான தாமிர சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் இவற்றை மீண்டும் இயக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தற்காலிக அதிபரும் ஓட்டம்



ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து ஆப்கனின் தற்காலிக அதிபராக, முன்னாள் துணை அதிபர் அமருல்லா சலேஹ் பொறுப்பேற்றதாக கூறப்பட்டது. 'அதிபர் இல்லாத நிலையில் தற்போது நானே அதிபர்' என, அவர் கூறி வந்தார். ஆப்கனில் ஆட்சி அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்காலிக அதிபர் சலேஹும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆப்கனில் அமைய உள்ள தலிபான் அரசில் பெண்களுக்கு இடம் மறுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கக் கோரி, காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.


தொடரும் எதிர்ப்பு



ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிவிட்டாலும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதி மட்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.அங்கு தலிபான்களுக்கு எதிராக மசூத் தலைமை யிலான ஆப்கன் தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலிபான் எதிர்ப்பாளர்கள் பலரும் இதில் இணைந்துள்ளனர். நேற்று நடந்த மோதலில் இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
04-செப்-202117:48:21 IST Report Abuse
E. RAJAVELU எவன் எந்த முயற்சி செய்தாலும் இந்து முசுலீம் கிருத்துவ ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-செப்-202115:45:53 IST Report Abuse
Anand அவர்களால் ஒன்றும் அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை, அப்படி ஏற்பட்டாலும் அவர்களை இந்திய ராணுவம் துவம்சம் செய்துவிடும். பிரச்சனை அதுவல்ல, இங்குள்ள திருட்டு திராவிஷம், இத்தாலி மாபியா, உண்டியல்ஸ், மமதை, போன்ற தீய சக்திகளை வேரோடு அறுத்தெடுக்கவேண்டும். இவைகளை துவம்சம் செய்தாலே போதும் இந்தியா சந்தித்துக்கொண்டிருக்கும் ஆபத்து நீங்கிவிடும்...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-செப்-202113:53:11 IST Report Abuse
Kasimani Baskaran அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது. ஐநா மூலம் பல நாடுகள் மற்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு நெறுக்குதல் கொடுக்க வலியுறுத்துகின்றன. ஐநாவால் ஆப்கானிஸ்தானுக்கு பொருளாதாரத்தடை கொண்டு வர முடியும். ஆகவே பல தீவிரவாத அமைப்புகள் தலிபான்களுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்திருக்கின்றன. இது இந்தியாவுக்கு நல்ல பலனையே கொடுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X