பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் அறிவு கிடையாது: அடித்து சொல்கிறார் விஜய்சேதுபதி

Added : செப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''அரசியலுக்கு போகிற அளவுக்கு அறிவு கிடையாது,'' என, நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய, 'லாபம்' படம், வரும், 9ல், தியேட்டரில் வெளியாகிறது. அது குறித்து, விஜய்சேதுபதி அளித்த பேட்டி:'லாபம்' படத்தில், விவசாயத்திற்கு பின்னால் உள்ள பொருளாதார அரசியலை, தன் பாணியில் ஜனநாதன் வெளிப்படுத்தி உள்ளார். விவசாயத்தை நாம் பார்க்காத புதிய கோணத்தில்,
 அரசியல் அறிவு கிடையாது: அடித்து சொல்கிறார் விஜய்சேதுபதி

சென்னை:''அரசியலுக்கு போகிற அளவுக்கு அறிவு கிடையாது,'' என, நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.

மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய, 'லாபம்' படம், வரும், 9ல், தியேட்டரில் வெளியாகிறது. அது குறித்து, விஜய்சேதுபதி அளித்த பேட்டி:'லாபம்' படத்தில், விவசாயத்திற்கு பின்னால் உள்ள பொருளாதார அரசியலை, தன் பாணியில் ஜனநாதன் வெளிப்படுத்தி உள்ளார். விவசாயத்தை நாம் பார்க்காத புதிய கோணத்தில், ஜனநாதன் பார்த்த கோணத்தில் படத்தை பார்க்கலாம்.

லாபம் என்பது எப்படி பகல் கொள்ளையாக மாறுகிறது என்பதை, பொருளாதார விஞ்ஞானிகள் கூறிய விளக்கத்துடன் படமாக்கியுள்ளார். படத்தின், 'க்ளைமாக்ஸ்' வரை, அனைத்தையும் முடித்துக் கொடுத்து தான் ஜனநாதன் மறைந்தார். உதவிக்கு ஆட்கள் இல்லாததால் தான், அவரை இழந்து விட்டோம்.

நான் நடித்த பல படங்கள் தயாராகி, நான்கு ஆண்டுகள் ஆகியும் சட்ட சிக்கலால் வெளி வராமல் இருந்தன. தற்போது, அவை வெளியாவதால், அதிக படங்கள் வெளிவரும் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வித்தியாசமான படங்களை, நான் தேர்வு செய்வதில்லை. கதையை சுவாரஸ்யமாக கூறவே விரும்புகிறேன். என்னால் முடிந்தது சம்பளத்தை விட்டுக் கொடுப்பதே.

ராமராஜன், ரஜினி, கவுண்டமணி, கனகா உள்ளிட்ட யார் இடத்தையும், இப்போது வந்த நம்மால் நிரப்ப முடியாது. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவர்கள் செய்ததில் கால் துாசி கூட என்னால் செய்ய முடியாது.இப்போது பாதி நேரத்தை, 'டெக்னாலஜி' சாப்பிட்டு விடுகிறது. அரசியலுக்கு போவதற்கு அறிவு வேண்டும். அந்த அறிவு, சத்தியமாக எனக்கு இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
04-செப்-202109:15:19 IST Report Abuse
Girija ஒரு கிழவியை இத்தனை நாள் மனையில் வைத்து கும்மியடித்தது போதும், ஜனங்கள் உறுப்பிடற வழியை பாருங்க. ஓ டி டி வாழ்க , இந்த கலாச்சாரத்திற்கு ஒரு முடிவு தானாக வந்தது. தானா வந்த முடிவு ................ டைட்டில் பதிவு செய்துவிடுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X