சென்னை - விளாடிவாஸ்டாக் திட்டம் ரஷ்ய உறவை வலுப்படுத்தும்

Updated : செப் 05, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : ''சென்னை - விளாடிவாஸ்டாக் கடல்சார் தொழில் வழித்தட திட்டம், இந்தியா - ரஷ்யா நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கு பொருளாதார மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:இந்தியா - ரஷ்யா இடையே காலத்திற்கு அப்பாற்பட்ட நெருக்கமான நட்புறவு உள்ளது. இரு
சென்னை - விளாடிவாஸ்டாக், திட்டம் ரஷ்ய  வலுப்படுத்தும்: மோடி

புதுடில்லி : ''சென்னை - விளாடிவாஸ்டாக் கடல்சார் தொழில் வழித்தட திட்டம், இந்தியா - ரஷ்யா நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கு பொருளாதார மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:

இந்தியா - ரஷ்யா இடையே காலத்திற்கு அப்பாற்பட்ட நெருக்கமான நட்புறவு உள்ளது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும். கொரோனா தடுப்பூசி 'சப்ளை' உள்ளிட்டவற்றில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் யமால் முதல், விளாடிவாஸ்டாக் வரையும், அங்கிருந்து தமிழக தலைநகர் சென்னை வரையிலும் நடைபெறும் முக்கிய எரிவாயு திட்டங்களில் இந்தியர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.இதன் வாயிலாக இரு நாடுகள் இடையே எரிசக்தி மற்றும் வர்த்தக இணைப்பு உருவாகி உள்ளது.

சென்னை - விளாடி வாஸ்டாக் கடல்சார் தொழில் வழித்தட போக்கு வரத்து திட்டப் பணிகள் விரைவாக நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஷ்யாவின் துாரக் கிழக்கு பகுதியில் ஏராளமான வளங்கள் உள்ளன. அப்பகுதியின் வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்கும் ஏராளமான திறமைசாலிகள் இந்தியாவில் உள்ளனர்.

இதன் வாயிலாக இரு நாடுகளும் பயன்பெறும்.கடந்த 2019ல் விளாடிவாஸ்டாக் - ஸ்வெஸ்டா இடையே நான் புடினுடன் படகில் பயணித்தபோது, அங்குள்ள கப்பல் கட்டும் தொழிற்கூடத்தை அவர் எனக்கு காட்டினார்.

தற்போது இந்தியாவின் மசகான் டாக்ஸ் நிறுவனம் ஸ்வெஸ்டா உடன் இணைந்து கப்பல் கட்டும் பணியை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
09-செப்-202116:54:14 IST Report Abuse
yavarum kelir மோடி அவர்களின் அடுத்த சிக்ஸர்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-செப்-202117:32:00 IST Report Abuse
Pugazh V ரஷ்ய கம்யூனிஸ்ட் களை நம்பி இந்திரா காந்தி அம்மையார் இந்திய வளர்ச்சி யைக் குலைத்தார் என்று பாஜக தலைவர்கள்.சில மாதங்கள் முன்பு பேசினார்கள்?? இப்போது ரஷ்யா இந்திய ர்களுக்கு வேலை குடுக்கணும். ரஷ்யா வின் எரிவாயு திட்டம் வேகமாக நடப்பது மகிழ்ச்சி என்று இவர் அமவட தவலவட.எல்லாம் சுடறார்??? என்ன ஆச்சு??
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-செப்-202117:29:28 IST Report Abuse
Pugazh V கடந்த பத்து பதினைந்து ஆண்டு களாக இந்த கடல் வழிப் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. எரிவாயு காரிடார் திட்டமும் பல ஆண்டுகளாக நடக்கும் ஒன்று தான். இவை பற்றி இவர் என்ன சொல்ல வருகிறார்? ஏதோ ஒரு துறைமுக காண்ட்ராக்ட்டரின் பணி.பற்றி இவர் ஏன் பெருமைப்பட வேண்டும்? ஆனால் இப்படியெல்லாம் பாஜக கொத்தடிமை கள் சிந்திக்காது. ஆ... பாத்தியா..மோடி சென்னை லேருந்து ரஷ்யா வுக்கே கடல் ல ரோடு போடறார் என்று எழுதி புல்லரித்துக் கொள்ளப் போகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X