கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகை ஜாமின் மனு:மீண்டும் தள்ளுபடி

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை:நடிகை மீரா மிதுனின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன.வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன்

சென்னை:நடிகை மீரா மிதுனின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன.

வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர்.இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, மீரா மிதுனும், நண்பரும் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மீரா மிதுனின் நீதிமன்ற காவல், செப்., 9 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஜாமின் கேட்டு, மீரா மிதுனும், அவரது நண்பரும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதி ஆர்.செல்வகுமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா, ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.இதையடுத்து, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X