வ.உ.சி.,யின் 150வது பிறந்த நாள்: முதல்வர் வெளியிட்ட 14 அறிவிப்புகள்

Updated : செப் 05, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை :வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 14 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.அவரது அறிவிப்பு:நான் முதல்வராக பொறுப்பேற்ற பின், என் முதல் சுதந்திர தின உரையில், 'வ.உ.சி.,யின் 150வது பிறந்த நாள் விழா, அரசு சார்பில் கொண்டாடப்படும்' என அறிவித்திருந்தேன். அதை தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150வது ஆண்டாக வருகிற காரணத்தால் 14 அறிவிப்புகளை அறிவிக்கிறேன்.*
 வ.உ.சி., 150வது பிறந்த நாள்: முதல்வர் , 14 அறிவிப்புகள்

சென்னை :வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 14 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அவரது அறிவிப்பு:நான் முதல்வராக பொறுப்பேற்ற பின், என் முதல் சுதந்திர தின உரையில், 'வ.உ.சி.,யின் 150வது பிறந்த நாள் விழா, அரசு சார்பில் கொண்டாடப்படும்' என அறிவித்திருந்தேன். அதை தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150வது ஆண்டாக வருகிற காரணத்தால் 14 அறிவிப்புகளை அறிவிக்கிறேன்.

* சென்னை காந்தி மண்டபத்தில், வ.உ.சி., சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கும் மண்டபம் பொலிவூட்டப் பட்டு, அவரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்

* துாத்துக்குடி மாநகரில் முதன்மை சாலையான மேலபெரிய காட்டன் சாலை, இனி 'வ.உ.சிதம்பரனார் சாலை' என அழைக்கப்படும்

* தன் வாழ்நாளில் முக்கிய நாட்களை கோவை சிறையில் கழித்த வ.உ.சி., முழு உருவச்சிலை, கோவை வ.உ.சி., பூங்காவில் அமைக்கப்படும்

* செய்தித் துறை பராமரிப்பில் உள்ள, துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள மணி மண்டபமும் புனரமைக்கப்படும். அவ்விடங்களில் அவரது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில், ஒலி - ஒளி காட்சி அமைக்கப்படும்

* அவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படத்தை, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், 'டிஜிட்டல்' முறையில் வெளியிடப்படும்

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், வ.உ.சிதம்பரனார் பெயரில் புதிய ஆய்விருக்கை அமைக்கப்படும்

* அவர் எழுதியுள்ள அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, பாடநுால் கழகம் சார்பில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்

* திருநெல்வேலியில் வ.உ.சி., மற்றும் பாரதியார் படித்த பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம், நினைவு நுழைவாயில், 1.05 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

* கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர்ஒருவருக்கு, 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., விருது' ஆண்டுதோறும் வழங்கப்படும்.
விருது தொகையாக 5லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்

* வ.உ.சி., மறைந்த நவம்பர் 18ம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்து கொண்டாடப்படும்

* இந்த ஆண்டு செப்., 5 முதல், 2022 செப்., 5 வரை, துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உருவாகும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி., பெயர் சூட்டப்படும்

* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்து துறை சார்பில், பஸ் ஒன்றில் வ.உ.சி., வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து, பள்ளிகளுக்கும், கல்லுாரிகளுக்கும் அனுப்பப்படும்.
* தமிழ் பல்கலை வாயிலாக, சிதம்பரனார் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெறும்.

தமிழ் நிகர்நிலை கல்விக் கழகம் வாயிலாக, அவர் எழுதிய நுால்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் முழுதும் இணையதளத்தில் மின்மயப்படுத்தி வெளியிடப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
04-செப்-202121:52:37 IST Report Abuse
Velayutharaja Raja வ.உ சி அவர்களின் தியாகம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.முதல்வரின் இந்த அறிவிப்பை மனமார வரவேற்கிறேன்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
04-செப்-202118:10:44 IST Report Abuse
RaajaRaja Cholan நீங்கள் அருகில் வைத்திருக்கும் அதிகாரிகள் செயலாளர்கள் மிகுந்த தகுதி அறிவு மிக்க அதிகாரிகள் , அவர்கள் சொல்படி சிந்தித்து செயல்பட்டால் இந்த ஆட்சி சிறக்கும் , வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
04-செப்-202117:42:42 IST Report Abuse
Bhaskaran வ.உ.சி.அய்யாவின் தியாகத்துக்கு முன் இந்த சிறப்பெல்லாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X