கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிக்குகிறார்?

Updated : செப் 04, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை : வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளதாகவும், அது தொடர்பாக மேல் விசாரணை நடந்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனால், சொத்து குவிப்பு வழக்கில், 'மாஜி' அமைச்சர் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., அமைச்சரவையில், பால் வளத்துறை அமைச்சராக ராஜேந்திர
மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,சிக்குகிறார்?

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளதாகவும், அது தொடர்பாக மேல் விசாரணை நடந்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனால், சொத்து குவிப்பு வழக்கில், 'மாஜி' அமைச்சர் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அமைச்சரவையில், பால் வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தார். வருமானத்துக்கு அதிகமாக, 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


மாறுபட்ட உத்தரவுஇந்த வழக்கை, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு விசாரித்தது. சொத்து குவிப்பு புகார் குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி, நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார். வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதா உத்தரவிட்டார். இருவரும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, நீதிபதி நிர்மல்குமார் முன், வழக்கு விசாரணை துவங்கியது.


மேல்முறையீடுராஜேந்திர பாலாஜி சார்பில், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ''ஏற்கனவே, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மகேந்திரன் தொடர்ந்த வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடந்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது,'' என்றார்.''லஞ்ச ஒழிப்புத் துறை விதிகளின்படி, ஏழு ஆண்டுகளுக்குள் தான் விசாரணை காலக்கெடு இருக்க வேண்டும்; ஆனால், 1996ல் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது சரியல்ல,'' என்றும் அவர் வாதாடினார்.அவரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, நேற்று ஆஜராகி வாதாடியதாவது:


73 சதவீதம்ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார் குறித்த, ஆரம்ப கட்ட விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி, வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது.வழக்கை கைவிடுவது தொடர்பாக, முழுமையான விசாரணைக்கு பின்னரே முடிவு செய்ய முடியும்; ஆரம்ப கட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது.


இறுதி அறிக்கை தாக்கல்தற்போது மேற்கொண்டு விசாரணை துவங்கி உள்ளது. ஒரு வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்னும், மேல் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் வாதத்துக்கு பதில் அளிக்கவும், எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யவும், ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை 8ம் தேதிக்கு நீதிபதி நிர்மல்குமார் தள்ளி வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-செப்-202116:11:11 IST Report Abuse
Pugazh V ராஜேந்திர பாலாஜி க்கு முட்டுக்கொடுத்து எழுதுவதற்கு கூச்சம் தயக்கம் வெட்கம் என்று எதுவுமே இல்லை. அவர் செய்யலியா..இவர் செய்யலியா என்று எழுதுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? ரா.பாலாஜியின் கொள்ளையைச் செய்தியாகப் போடக்கூடாதா? விட்டு விட வேண்டுமா? கொள்ளையடித்தது தவறு என்று எழுத மனம் வரவில்லை. கூட்டாளியாச்சே. மஞ்ச சட்டை வேற போட்டிருக்கார். அதனால்.. ஒரே குட்டை மட்டை என்று உருட்டுகிறார்கள் பாவம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-செப்-202115:21:20 IST Report Abuse
D.Ambujavalli Only seven crores This must be the amount in the kitchen grocery box ( anjaraip petti )
Rate this:
Cancel
04-செப்-202114:29:58 IST Report Abuse
ஆரூர் ரங் வரவேற்கிறேன்..அதே சமயம்😷 இலங்கையில் 28000 கோடி முதலீடுகள் செய்த ரட்சகன் பற்றி விசாரணை இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X