பொது செய்தி

இந்தியா

பசுவின் பெருமை: நீதிபதி நெகிழ்ச்சி

Added : செப் 03, 2021
Share
Advertisement
அலகாபாத்:''சுவாசிக்கும் போது ஆக்சிஜனை உள்ளிழுத்து அதையே வெளியேற்றும் ஒரே விலங்கு பசு என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர்,'' என, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறினார். உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கிலேந்திரா சிங் என்பவரின் பசுவை திருடி, அதை இறைச்சிக்காக கொன்றதாக கைது
 பசுவின் பெருமை: நீதிபதி நெகிழ்ச்சி

அலகாபாத்:''சுவாசிக்கும் போது ஆக்சிஜனை உள்ளிழுத்து அதையே வெளியேற்றும் ஒரே விலங்கு பசு என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர்,'' என, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறினார்.
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவர், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கிலேந்திரா சிங் என்பவரின் பசுவை திருடி, அதை இறைச்சிக்காக கொன்றதாக கைது செய்யப்பட்டார்.ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாவேத் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சேகர் குமார் யாதவ், 'பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்' என, சமீபத்தில் உத்தரவிட்டது பரபரப்பை ஏற் படுத்தியது.

அந்த உத்தரவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:பசு மற்றும் காளைகளை கொல்வது மனிதனை கொல்வதற்கு சமம் என யேசு கிறிஸ்து கூறியுள்ளார். என்னை கொன்றாலும் பரவாயில்லை; பசுவை வதைக்காதீர்கள் என, பண்டிட் மதன் மோகன் மால்வியா தெரிவித்தார். பசு மனிதனின் நண்பன் என புத்தர் கூறினார். சுவாசிக்கும் போது ஆக்சிஜனை உள்ளிழுத்து அதையே வெளியேற்றும் ஒரே விலங்கினம் பசு மட்டுமே என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படும் போது, பசு பாதுகாப்பை அடிப்படை உரிமையாக சேர்க்க வேண்டும் என பல்வேறு உறுப்பினர்களும் கோரினர். க்வாஜா ஹஸன் நிஸாமி, அக்பர், ஹுமாயூன், பாபர் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள் பசு வதையை எதிர்த்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X