நியூசிலாந்தில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Added : செப் 03, 2021
Share
Advertisement
வெல்லிங்டன்:நியூசிலாந்தில் மார்க்கெட்டில் நடந்த கத்திக்குத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நேற்று மர்ம நபர் நுழைந்தார். கண்ணில் தென்பட்ட அனைவரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் கடைக்காரர்கள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். சம்பவ

வெல்லிங்டன்:நியூசிலாந்தில் மார்க்கெட்டில் நடந்த கத்திக்குத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நேற்று மர்ம நபர் நுழைந்தார். கண்ணில் தென்பட்ட அனைவரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் கடைக்காரர்கள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மார்க்கெட்டை சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

தாக்குதல் நடத்திய நபர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறியதாவது:ஆக்லாந்து மார்க்கெட்டில் நடந்தது பயங்கரவாத தாக்குதல். கத்திக்குத்தில் ஈடுபட்டவர் இலங்கையை சேர்ந்தவர். அவர் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர். நியூசிலாந்தில் வசித்து வந்த அவரை 2016 முதல் போலீசார் கண்காணித்து வந்தனர். சட்ட ரீதியிலான காரணங்கள் இல்லாததால் அவரை கைது செய்ய முடியாமல் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X