துப்பாக்கி சுடும் பயிற்சியில் போலீஸ்காரருக்கு கண் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் பயிற்சியில் போலீஸ்காரருக்கு கண் பாதிப்பு

Added : செப் 03, 2021
Share
கடலுார்-கடலுாரில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, வெடிமருந்து விழுந்து போலீஸ்காரர் கண் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் துப்பாக்கி சுடும் திறனை அறிந்து கொள்ளவும், மேம்படுத்தவும் ஆண்டுக்கு ஒரு முறை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலுார் மாவட்ட போலீசாருக்கு, கடந்த 28ம் தேதி முதல், கேப்பர்மலை ராமாபுரம் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும்

கடலுார்-கடலுாரில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, வெடிமருந்து விழுந்து போலீஸ்காரர் கண் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் துப்பாக்கி சுடும் திறனை அறிந்து கொள்ளவும், மேம்படுத்தவும் ஆண்டுக்கு ஒரு முறை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலுார் மாவட்ட போலீசாருக்கு, கடந்த 28ம் தேதி முதல், கேப்பர்மலை ராமாபுரம் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியளிக்கப்படுகிறது. அவர்களுக்கு 303 ரைப்பில், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.புவனகிரி போலீசார் நேற்று பயிற்சியில் பங்கேற்றனர். போலீஸ்காரர் கார்த்திக், 38, துப்பாக்கி குண்டு வெடிக்க செய்தபோது, வெடிமருந்து வலது கண்ணில் விழுந்தது. எரிச்சல் தாங்க முடியாமல் தவித்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் புதுச்சேரி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X