சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகள் தீக்குளிக்க முயற்சி

Added : செப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; திருமணம் செய்வதாக ஏமாற்றியவர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண், தந்தையுடன் கலெக்டர் அலுவலம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு பணிகள் முடிந்து நேற்று மதியம் 3.30 மணியளவில் அலுவலகம் வந்தார். அப்போது அலுவலக நுழைவு வாயிலில் மகளுடன் நின்றிருந்தவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.கலெக்டரின்

கள்ளக்குறிச்சி; திருமணம் செய்வதாக ஏமாற்றியவர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண், தந்தையுடன் கலெக்டர் அலுவலம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு பணிகள் முடிந்து நேற்று மதியம் 3.30 மணியளவில் அலுவலகம் வந்தார். அப்போது அலுவலக நுழைவு வாயிலில் மகளுடன் நின்றிருந்தவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷபி மற்றும் போலீசார் தடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். கல்வராயன்மலை அடுத்த மேல்முருவம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் மகள் பழனியம்மாள், 23; இவர் பி.எஸ்சி., முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவருக்கும் எழுத்துாரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

நாகராஜ் மொபைல் போன் மூலம் பேசி, பழனியம்மாளை சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகியதில் இரு முறை பழனியம்மாள் கர்ப்பமடைந்துள்ளார்.கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிடுமாறு நாகராஜ் தெரிவித்ததுடன், செலவுக்காக அவ்வப்போது பழனியம்மாளிடம் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார்.இதற்கிடையே, இருவருக்கும் ஜூலை 4ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. அதே மாதம் 16ம் தேதி திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால். கொரோனா தொற்று காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ள நாகராஜ் குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். மேலும் நாகராஜிக்கு வேறு பெண்ணைத் திருமணம் செய்து, வைக்க ஏற்பாடு செய்வதாக ஆக., 20ம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பழனியம்மாள் புகார் அளித்தார். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தந்தையுடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.இருவருக்கும் அறிவுரை வழங்கி மனுவை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X