சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே அ.ம.மு.க., பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டை, ஞானம்பெற்றால்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 37; அ.ம.மு.க., பிரமுகர். இவர், ஜூலை 13ம் தேதி காலை வயலுக்குச் சென்றார். அப்போது சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உறவினர்

திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே அ.ம.மு.க., பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டை, ஞானம்பெற்றால்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 37; அ.ம.மு.க., பிரமுகர். இவர், ஜூலை 13ம் தேதி காலை வயலுக்குச் சென்றார். அப்போது சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உறவினர் உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்தனர்.மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். இதற்கிடையே கொலை வழக்கில் கோவிந்தன் உறவினரான சின்னதம்பி மகன் சேட்டு, 30; உளுந்துார்பேட்டை கோர்ட்டில் ஜூலை 20ல் சரணடைந்தார்.அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி ஞானம்பெற்றால்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜி, 28; ராஜா மகன் ராஜி, 21; ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.இந்நிலையில், டி.எஸ்.பி., கங்காதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மணலுார்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்பிளண்டர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர்.அதில், அ.ம.மு.க., பிரமுகர் கோவிந்தன் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இருரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X