கார் மீது டெம்போ லாரி மோதல்: 5 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மீது டெம்போ லாரி மோதல்: 5 பேர் படுகாயம்

Added : செப் 03, 2021
Share
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே கார் மீது டெம்போ லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுடன் வந்த 9 வயது நாய் இறந்தது.சென்னையில் இருந்து, டெம்போ லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் 10ம் அணியில் உள்ள கேன்டீனுக்கு நேற்று பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தது.லாரியை சேலம் மாவட்டம்,

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே கார் மீது டெம்போ லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுடன் வந்த 9 வயது நாய் இறந்தது.சென்னையில் இருந்து, டெம்போ லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் 10ம் அணியில் உள்ள கேன்டீனுக்கு நேற்று பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தது.லாரியை சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, 43; ஓட்டி வந்தார். மதியம் 12:45 மணியளவில் டெம்போ லாரி டிரைவர், பாலி பட்டாலியன் வளாகத்திற்குள் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை கவனிக்காமல் சாலையின் குறுக்கே திருப்ப முயன்றார்.அப்போது, திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற 'ஸ்விப்ட்' கார் மீது மோதி லாரி கவிழ்ந்தது.இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் உரிமையாளரான சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பவீன்ராஜ், 26; இவரது தந்தை பாலகிருஷ்ணன், 55; தாய் சுப்புலட்சுமி, 45; தங்கை விஜயகுமார் மனைவி வெங்கடேஸ்வரி, 31; இவரது மகள் பவித்தா, 5; ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். காரில் வந்த 9 வயது விக்கி என்ற 'டாபர்மென்' நாய் இறந்தது.காயமடைந்த 5 பேரும், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.டெம்போ லாரி டிரைவர் பாலாஜி காயமின்றி தப்பினார்.எடைக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.காரில் இறந்த நாயை அதன் உரிமையாளர்கள், விபத்து நடந்த இடத்தின் அருகிலேயே புதைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X