கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மெக்சிகோ பெண் கொலை கணவர் ஜாமின் நிபந்தனை மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 03, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் மெக்சிகோ பெண் கொலை வழக்கில் முன்னாள் கணவரின் ஜாமின் அனுமதி நிபந்தனையில் மாற்றம் செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவர் கீழமை நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதித்தது.மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் மார்டின் மான்ட்ரிக் மன்சூர்48, செசில்லா அகஸ்டா36. இவர்கள் கணவன், மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்தனர். அடில்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. கருத்து

மதுரை : மதுரையில் மெக்சிகோ பெண் கொலை வழக்கில் முன்னாள் கணவரின் ஜாமின் அனுமதி நிபந்தனையில் மாற்றம் செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவர் கீழமை நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதித்தது.

மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் மார்டின் மான்ட்ரிக் மன்சூர்48, செசில்லா அகஸ்டா36. இவர்கள் கணவன், மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்தனர். அடில்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூர் 2011 ஜூலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அங்கு குழந்தையுடன் வசித்தார்.செசில்லா அகஸ்டா மோகினி ஆட்டம் கற்க கேரளா திருச்சூர் கலா மண்டலம் வந்தார். அங்கு தங்கி இருந்தவர், குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தார்.

குழந்தையுடன் வெளிநாடு செல்வதாக செசில்லா தெரிவித்தார். 2012 ஏப்.,9 ல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மன்சூர் தாக்கியதில், செசில்லா பலியானார். அவரது உடலை காரில் கொண்டுவந்து மதுரை ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் புதரில் எரித்தார். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் 2020 செப்.,11 ல் உத்தரவிட்டது. தற்காலிகமாக சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதித்து ஜூலை 28 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்டின் மான்ட்ரிக் மன்சூர், 'இருநபர் ஜாமின் உத்தரவாதத்தில் ஒருவர் ரத்த சம்பந்தமானவராக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. ரத்த சம்பந்தமானவர்கள் மெக்சிகோவில் உள்ளனர். அவர்கள் இங்குவர வாய்ப்பில்லை. அந்நிபந்தனையை மாற்றியமைக்க வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு: நிபந்தனை மாற்றியமைக்கப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்தவர்களே ஜாமின் உத்தரவாதம் அளிக்கலாம். மனுதாரர் மதுரை மகளிர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X