சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியவர்களுக்கு ரூ.3.96 கோடி கூடுதல் இழப்பீடு வழங்கல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
நெய்வேலி-என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய 65 நபர்களுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.3 கோடியே 96 லட்சத்திற்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகைவழங்கப்பட்டது.கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20ல் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்ற அமர்வு நடந்தது. என்.எல்.சி.,நில எடுப்புத்துறை முதன்மை பொது மேலாளர் லட்சுமி காந்த

நெய்வேலி-என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய 65 நபர்களுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.3 கோடியே 96 லட்சத்திற்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகைவழங்கப்பட்டது.

கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20ல் உள்ள கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்ற அமர்வு நடந்தது. என்.எல்.சி.,நில எடுப்புத்துறை முதன்மை பொது மேலாளர் லட்சுமி காந்த ராவ் தலைமை தாங்கினார். துணை பொது மேலாளர் விவேகானந்தன் வரவேற்றார். மாவட்ட நீதிபதி (ஓய்வு) நடராஜன், நெய்வேலி சார்பு நீதிமன்ற நீதிபதி சாதிக் பாட்சா ஆகியோர் பங்கேற்று நிலங்களை வழங்கியவர்களுக்கு காசோலை வழங்கினர்.என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்திற்கு கடந்த 1.1.2014க்கு பிறகு நிலங்களை வழங்கியவர்கள் , அரசு வழங்கும் வழிகாட்டுதல் மதிப்பை விட கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்கள் நீதி மன்றத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கும், நிலம் வழங்கியவர்களுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது.அதன்படி, அந்நிலங்களுக்கு ஏற்கனவே வழங்கிய ஏக்கருக்கு ரூ.5 லட்சம் அல்லது 6 லட்சம் தொகையையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.15 லட்சம் வழங்க இருதரப்பிலும் ஒத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு 52.45 ஏக்கர் பரப்பிலான நிலங்களை வழங்கிய 65 நபர்களுக்கு ரூ. 3 கோடியே 96 லட்சத்து 26 ஆயிரத்து 173 மதிப்பிலான காசோலைகள் கூடுதல் இழப்பீட்டுத்தொகையாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X