அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன விலங்கு தாக்கி பலி அரசு நிவாரணம் ரூ.5 லட்சம்

Added : செப் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.அவரது அறிவிப்புகள்:*கோவை, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில், வன விலங்குகளுக்கான உயர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்* வன உயிரின வழித்தடங்கள், சூழல் தாக்க மண்டலங்கள், ஈர
 வன விலங்கு தாக்கி பலி அரசு நிவாரணம் ரூ.5 லட்சம்

சென்னை:''வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்புகள்:

*கோவை, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில், வன விலங்குகளுக்கான உயர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்

* வன உயிரின வழித்தடங்கள், சூழல் தாக்க மண்டலங்கள், ஈர நிலங்கள், வனப் பகுதிகள் மற்றும் வன உயிரின வாழ்விடங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, வனத்துறை நடவடிக்கைகள் மின்னணு மயமாக்கப்படும்

* வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 4 லட்சம் ரூபாய், இனி 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். வன விலங்குகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்புக்கு நிலுவைத் தொகை வழங்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

*கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள யானைகள் வன வாழ்விடங்களை உள்ளடக்கி, அகத்தியர் மலையில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும்

*அழிந்து வரும் கடற்பசுக்கள் இனத்தை பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவில், கடற்பசு பாதுகாப்பகம் ஏற்படுத்தப்படும்

* வனப் பகுதிகளில் நடக்கும் வேட்டை, மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க, அனைத்து வன மண்டலத்திலும் மோப்ப நாய் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்

* கடல்வாழ் விலங்குகள் வேட்டை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில், கடல் வாழ் வன உயிரின குற்றங்களுக்கு என, சிறப்பு கடல்சார் உயர் இலக்கு படை உருவாக்கப்படும்

* வனப் பகுதிகளில் உள்ள உண்ணிச்செடி, சீமை கருவேலம் உள்ளிட்ட, களை தாவரங்களை அகற்றுவது தொடர்பாக, தனி கொள்கை உருவாக்கப்படும்

*வனத்துறை தொடர்பான தகவல்களை பொது மக்கள் எளிதில் அறிய, மாநில வன ஆவண களஞ்சியம் மற்றும் வன தரவு மையம் ஏற்படுத்தப்படும்

*தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு, நடப்பு ஆண்டு முதல் திருத்தப்பட்ட ஊதியம் வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தேயிலை தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம், வன தோட்டக் கழகம் ஆகியவை லாபம் ஈட்டுவதற்காக, விரிவான வணிக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
04-செப்-202110:44:54 IST Report Abuse
JeevaKiran வனப்பகுதியிலோ, யானைகளின் வழித்தடத்திலோ, வனவிலங்குகளின் வாழ்விடங்களிலோ மனித இழப்பு ஏற்பட்டால், நஷ்ட ஈடு தரக்கூடாது. ஏன் என்றால் அவையெல்லாம் வனவிலங்குகளின் இருப்பிடங்கள். அங்கு மனிதனுக்கு என்ன வேலை?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
04-செப்-202106:22:19 IST Report Abuse
NicoleThomson அப்போ மனிதன் தாக்கி சாவும் வனவிலங்கின் குடும்பங்களுக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X