மகளிர் கல்லுாரியில் தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லுாரியில் தடுப்பூசி முகாம்

Added : செப் 03, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.முகாமிற்கு, செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி, தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கூறினார். பதிவாளர் சவுந்தரராஜன், கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும்,

விழுப்புரம்-விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.முகாமிற்கு, செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி, தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கூறினார். பதிவாளர் சவுந்தரராஜன், கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், முதல்வர் பிருந்தா, முகக்கவசம் அணிவதன் அவசியம், வகுப்பறைகளில் சமூக இடைவெளியோடு மாணவிகள் அமர்வது குறித்தும் பேசினார்.முகாமில், நகராட்சி சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 370க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X