கிரைம் செய்திகள்...

Added : செப் 03, 2021
Share
Advertisement
மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்திருக்கோவிலுார்: மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுந்தரராமன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சடைகட்டி அருகே மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை நிறுத்தினர். லாரிகளை நிறுத்திய டிரைவர்கள் தப்பியோடினர். சோதனையில் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்து,

மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்திருக்கோவிலுார்: மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுந்தரராமன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சடைகட்டி அருகே மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை நிறுத்தினர். லாரிகளை நிறுத்திய டிரைவர்கள் தப்பியோடினர். சோதனையில் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, மணலுார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.எஸ்.பி.,யிடம் புகார் மனுவிழுப்புரம்: திண்டிவனம் அடுத்த நெடிமோழியனுாரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்துள்ள மனு:எனது 11 வயது மகள், என் மனைவியை தேடிக்கொண்டு கடந்த 25ம் தேதி கெண்டிம்பாக்கம் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நிலத்தில் நின்றிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர், என் மகளை திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து பெரியதச்சூர் போலீசில் புகார் கொடுத்தும் வழக்குப் பதியவில்லை.எனவே, கதிர்வேல் மீது எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் வழக்குப்பதியவும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.முன்விரோதம்: ஒருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: ஆமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 40; அதே ஊரைச் சேர்ந்தவர் அவரது மைத்துனர் சந்தோஷ்குமார், 29; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 31ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில், சந்தோஷ்குமார், ராமலிங்கத்தைத் தாக்கினார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் பேலீசார் வழக்குப் பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.சீட்டு பிடித்தவர் மாயம்விழுப்புரம்: அய்யங்கோவில்பட்டைச் சேர்ந்தவர் பாண்டியன், 40; தீபாவளி சீட்டு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர், பணம் கட்டியவர்களிடம் சரியாக கொடுக்கமுடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தொழிலாளி தற்கொலைவிழுப்புரம்: புதுச்சேரி மாநிலம், மடுகரையைச் சேர்ந்தவர் முருகன், 52; சென்ட்ரிங் தொழிலாளி. இவர், நீண்டநாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். நேற்று வலி அதிகரித்ததால் மனமுடைந்த முருகன், மதுவில் விஷம் கலந்து குடித்து மஞ்சம்மாதேவி கிராமத்தில் இறந்து கிடந்தார்.புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.உண்டியல் திருட்டு: வாலிபர் கைதுவிழுப்புரம்: தேவநாதசாமி நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன், 62; அங்குள்ள, ஆஞ்சநேயர் கோவில் செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு கோவிலில் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு மர்ம நபர் தப்பியோடியது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த பழனிவேல், 27; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X