பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் முறையாக நெல் விதைகள் உற்பத்தி

Added : செப் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்-தமிழகத்திலேயே முதல் முறையாக பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தியை விழுப்புரம் அருகே கலெக்டர் துவக்கி வைத்தார்.விழுப்புரம் மாவட்டம், விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. தமிழக அரசு வேளாண் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில்
 தமிழகத்தில் முதல் முறையாக நெல் விதைகள் உற்பத்தி

விழுப்புரம்-தமிழகத்திலேயே முதல் முறையாக பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தியை விழுப்புரம் அருகே கலெக்டர் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. தமிழக அரசு வேளாண் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யும் பணிகளை கலெக்டர் மோகன் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:இந்த விதை பண்ணையில், பாரம்பரிய நெல் விதைகளான துாயமல்லி 2 ஏக்கரிலும், செங்கல்பட்டு சிறுமணி 2 ஏக்கரிலும் நேற்று முதல் நாற்று இடப்பட்டு இயற்கை முறையில் பயிரிடப்படுகிறது.இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் இந்த நெல் விதைகளை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் கொண்டு சென்று இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்க அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.இயற்கை முறையிலான பாரம்பரிய நெல் விதைகளை விவசாய நிலங்களில், இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிகப்படியான மகசூல் பெற முடியும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.வேளாண் இணை இயக்குனர் ரமணன், துணை இயக்குனர் வேல்விழி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X