அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஸ்களில் சமூக இடைவெளி மாயம் :பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

Updated : செப் 05, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பால், சமூக இடைவெளியின்றி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். செப்டம்பர் 1 முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், கல்லுாரி வகுப்புகளும் துவக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாணவ - மாணவியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர்.பள்ளி, கல்லுாரி துவங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தில், பஸ்களில் கடும் கூட்ட
பஸ்கள், சமூக இடைவெளி ,மாயம்  பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி

அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பால், சமூக இடைவெளியின்றி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். செப்டம்பர் 1 முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், கல்லுாரி வகுப்புகளும் துவக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாணவ - மாணவியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

பள்ளி, கல்லுாரி துவங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தில், பஸ்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. சமூக இடைவெளி இல்லாமல், ஒருவருக்கொருவர் நெருக்கியபடி பயணிக்கின்றனர். இதனால், மாணவ - மாணவியர் மட்டுமின்றி, பயணியரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால், கடந்த காலத்தை விட, பஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும், பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவில்லை. அதேநேரம், பல பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் நாங்கள், பஸ் வசதியின்றி அவதிக்குஉள்ளாகிறோம்.இந்நிலையில், கொரோனா தடுப்பு, சமூக இடைவெளி ஆகியவை குறித்தெல்லாம் யோசிக்க கூட வாய்ப்பில்லை. வகுப்பறைகளில் சமூக

இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தும் தமிழக அரசு, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


'கொரோனா அறிகுறி இருந்தால் வேண்டாம்!'




'காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால், பள்ளிகளுக்கு வர வேண்டாம்' என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து விட்ட நிலையில், ஐந்து மாத இடைவெளிக்கு பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன. கல்லுாரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கடலுாரில் பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்புஉறுதியாகியுள்ளது.

இதனால், தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டுள்ள புதிய அறிவுரை:காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்; அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளும்படி,அவர்களை அறிவுறுத்த வேண்டும். அதன்பின், தொற்று இல்லை என்று தெரிந்து உடல் நலம் தேறிய பின், பள்ளிக்கு வந்தால் போதும். மாணவர்களை பொறுத்தவரைபள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-செப்-202122:09:12 IST Report Abuse
Pugazh V ஹலோ மதுமிதா... வெறும் ரெண்டு ரூபாய் மாஸ்க் வாங்கி போடாத மாணவமணிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் தான் பிரச்னை. ஆட்சி அல்ல. பொறுப்பு கெட்ட முட்டாள்கள் மாஸ்க் போடாமல் சமூக இடைவெளி இல்லாமல் அலைந்தால் அதுக்கு ஆட்சி என்ன பண்ண முடியும்”???(
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
04-செப்-202120:42:26 IST Report Abuse
தமிழ்வேள் பஸ்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கடினம் ..ஒரு வண்டிக்கு 20 பயணிகள் மட்டுமே ஏற்ற முடியும் ..அப்படியானால் ஒரு பஸ்ஸுக்கு பதில் நான்கு பஸ்கள் ஒரேநேரத்தில் இயக்கவேண்டியிருக்கும் ..பேருந்தை நிறுத்தினால் ,கார் டூவீலர் தொகை அதிகரிக்கும் ...எப்படியும் இம்சை ..அதற்கு பஸ்கள் எவ்வளவோ மேல் ...
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
04-செப்-202119:45:06 IST Report Abuse
venkates நம்ம கோயில் தான் பிரச்சினையா? இங்கே காரோண வராத?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X