பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டபுள்ளி விபரங்கள் கிராமங்களில் சேகரிப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
சிவகங்கை : ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அதிகாரிகள் இணைந்து கூட்டம் நடத்தினர்.சிவகங்கை ஒன்றியத்தில் கா.நெடுங்குளம்,கண்ணாரிருப்பு,அழகிச்சிபட்டி,சோழபுரம், திருமலை கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு அனைத்து துறை அதிகாரிகள் தரிசு நிலங்களை வேளாண் விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து

சிவகங்கை : ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அதிகாரிகள் இணைந்து கூட்டம் நடத்தினர்.

சிவகங்கை ஒன்றியத்தில் கா.நெடுங்குளம்,கண்ணாரிருப்பு,அழகிச்சிபட்டி,சோழபுரம், திருமலை கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு அனைத்து துறை அதிகாரிகள் தரிசு நிலங்களை வேளாண் விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கா.நெடுங்குளத்தில் வேளாண் துணை இயக்குநர் பன்னீர்செல்வம் தலைமையில், ஊராட்சித்தலைவர் எஸ்.ராஜேந்திரன் முன்னிலையில் அடிப்படை புள்ளி விபரங்கள்சேகரிக்கும் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் வளர்மதி வரவேற்றார்.

வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கார்த்திக், வி.ஏ.ஓ., முத்துக்குமார்,முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். 5 எக்டேர் முதல் 16 எக்டேர் வரையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு வேளாண் பொறியியல் துறையினர் இயந்திரங்கள் கொண்டுசீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.வேளாண் அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார்.* அழகிச்சிபட்டியில் வேளாண் அலுவலர் தங்கப்பாண்டியன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் அம்சவள்ளி, ஊராட்சித்தலைவர் பிரவீனா முன்னிலை வகித்தனர்.

உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார் வரவேற்றார். புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் பணி நடந்தது. வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சீனிவாசன், தோட்டக்கலை அலுவலர் கலைச்செல்வன், வி.ஏ.ஓ., புரோஸ்கான், முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X