அழகப்பா பல்கலை 5வது இடம்; தமிழகத்தில் முதலிடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழகப்பா பல்கலை 5வது இடம்; தமிழகத்தில் முதலிடம்

Added : செப் 03, 2021
Share
காரைக்குடி : டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலை., தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை., இந்திய அளவில் ஐந்தாவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.டைம்ஸ் உயர்கல்வி தரவரிசைக்கு 2021ல் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 99 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பல்கலை., தரவரிசைப் படுத்தப்பட்டன.இதில் காரைக்குடி அழகப்பா

காரைக்குடி : டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலை., தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை., இந்திய அளவில் ஐந்தாவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசைக்கு 2021ல் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 99 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பல்கலை., தரவரிசைப் படுத்தப்பட்டன.இதில் காரைக்குடி அழகப்பா பல்கலை.,ஒட்டு மொத்த தரவரிசை பிரிவில் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

இத்தரவரிசைக்காக, கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு, பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம் மற்றும் தொழில்துறை வருமானம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் உயர் கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தியுள்ளது.அழகப்பா பல்கலை., தரவரிசைப் பிரிவின் இயக்குநர் ஜெயகாந்தன் பல்கலை.,யின் 2021க்கான தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X