வேளாண் இடுபொருள் விற்பனை நிலையம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் இடுபொருள் விற்பனை நிலையம் துவக்கம்

Added : செப் 03, 2021
Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குழு சார்பில் வேளாண் இடுபொருள் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 550 விவசாயிகள் ஒன்றிணைந்து குழு அமைத்து கோமுகி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிட்டெட் எனும் வேளாண் இடுபொருள் விற்பனை நிலையத்தை துவங்கியுள்ளனர். ஆலத்துார் கிராமம் அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள இந்நிறுவனத்தை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குழு சார்பில் வேளாண் இடுபொருள் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 550 விவசாயிகள் ஒன்றிணைந்து குழு அமைத்து கோமுகி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிட்டெட் எனும் வேளாண் இடுபொருள் விற்பனை நிலையத்தை துவங்கியுள்ளனர். ஆலத்துார் கிராமம் அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள இந்நிறுவனத்தை நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி, வேளாண் இணை இயக்குனர் ஜெகந்நாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன் முன்னிலை வகித்தார். நிறுவன நிர்வாகி அபர்ணா வரவேற்றார்.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட டி.இ.ஓ., ராஜேஷ், வேளாண் உதவி இயக்குனர்கள் அன்பழகன், சாமுவேல், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வாமலை வாழ்த்திப் பேசினர்.மத்திய அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் மூலமாக விவசாய தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு மானியங்களுடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன. இதனை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவாக சேர்ந்த பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நிறுவன இயக்குனர்கள் மணிபாரதி, கோபால், முருகன், சிவபெருமான், ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X