பைபர் நெட் சேவை இணைப்பில் தமிழக பி.எஸ்.என்.எல்., முதலிடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பைபர் நெட்' சேவை இணைப்பில் தமிழக பி.எஸ்.என்.எல்., முதலிடம்

Added : செப் 03, 2021
Share
சென்னை:தமிழக பி.எஸ்.என்.எல்.,லில், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 82 ஆயிரம் 'பைபர் நெட்' இணைப்பு சேவை வழங்கப்பட்டு உள்ளது.தமிழக பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் ஜி.முரளீதரன் கூறியதாவது:நாடு முழுதும் உள்ள பி.எஸ்.என்.எல்., வட்டங்களில், பைபர் நெட் சேவை இணைப்பு வழங்குவதில், தமிழக வட்டம் முதலாவதாக உள்ளது. தமிழகம் முழுதும் இதுவரை 2.3 லட்சம் பைபர் நெட் சேவைக்கான

சென்னை:தமிழக பி.எஸ்.என்.எல்.,லில், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 82 ஆயிரம் 'பைபர் நெட்' இணைப்பு சேவை வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் ஜி.முரளீதரன் கூறியதாவது:நாடு முழுதும் உள்ள பி.எஸ்.என்.எல்., வட்டங்களில், பைபர் நெட் சேவை இணைப்பு வழங்குவதில், தமிழக வட்டம் முதலாவதாக உள்ளது. தமிழகம் முழுதும் இதுவரை 2.3 லட்சம் பைபர் நெட் சேவைக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 2.25 லட்சம் பைபர் நெட் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 82 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி இணைப்புகள் வழங்கப்படும் என, நம்புகிறோம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பைபர் நெட் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளூர் 'கேபிள் ஆப்பரேட்டர்'கள் உட்பட 2,152 விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றனர். மாதம் 200 உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களை இணைத்து, கூடுதலான பைபர் நெட் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X