தமிழ்நாடு

கூடுதலாக்கப்படுமா?: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதார் சேவை மையம்...அலைக்கழிப்பால் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் ஆதார் சேவை மையங்களை ஏற்படுத்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்துார்பேட்டை, கல்வராயன்மலை, திருக்கோவிலுார் உள்ளிட்ட 6 தாலுகாக்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குழந்தைகளை
 கூடுதலாக்கப்படுமா?: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதார் சேவை மையம்...அலைக்கழிப்பால் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் ஆதார் சேவை மையங்களை ஏற்படுத்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்துார்பேட்டை, கல்வராயன்மலை, திருக்கோவிலுார் உள்ளிட்ட 6 தாலுகாக்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வங்கி கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட், பான்கார்டு மற்றும் ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து அரசு சார்ந்த சேவைகளை பெறவும், மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயனடைவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது.

குறிப்பாக, ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைப் பெற, பயோ மெட்ரிக் கருவியில் பயனாளிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில், முதியோர்களின் கை ரேகை பொருந்தாததால், தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்திற்குச் சென்று, ஆதார் கார்டில் கைரேகையை பதிவிட்டு புதுப்பிக்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதுதவிர, புதிய ஆதார் கார்டு எடுப்பவர்கள். பழைய ஆதார் கார்டில் பெயர், முகவரி திருத்தம்,

பிறந்த வருடத்தை மாற்றுதல், மொபைல் எண்ணை சேர்த்தல், புகைப்படம் புதுப்பித்தல் உள்ளிட்டவைக்காக பொதுமக்கள் பலர் தங்களது பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில், 5 தாலுகா அலுவலகங்கள், கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகம், தேசியமயமாக்கப்பட்ட இரண்டு வங்கிகள், நகராட்சி அலுவலகம் என 9 இடங்களில் மட்டுமே ஆதார் சேவை மையம் செயல்படுகிறது.நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக, இந்த 9 மையங்களுக்கு செல்கின்றனர். அங்கு டோக்கன் அடிப்படையில் பொதுமக்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு,

திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.ஒரு மையத்தில், நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 கார்டுதாரர்களுக்கு மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். அதிலும் மின்நிறுத்தம், இணையதளம் வேகம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகளால் 30 ஆதார் திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும்.மீதமுள்ள மக்கள், மறுநாள் வர வேண்டிய நிலை நீடிக்கிறது. இதனால் பயணசெலவு, கால விரயம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.எனவே, மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களை அதிகரித்திடவோ அல்லது தற்போது இயங்கும் ஆதார் சேவை மையங்களில், கூடுதல் பணியாளர்களை நியமித்து ஆதார் திருத்தங்களை அதிகரித்திடவோ கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வராயன்மலையில் எப்போது?கள்ளக்குறிச்சி மாவட்ட உதயத்திற்குப்பின், கல்வராயன்மலை புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அலுவலகம் வெள்ளிமலை பி.டி.ஓ., அலுவலகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. அங்கு ஆதார் சேவை மையம் இல்லை. இதனால், கல்வராயன்மலை தாலுகாவிற்குட்பட்ட 44 வருவாய் கிராம மக்கள், ஆதார் சேவைகளைப் பெற 40 கி.மீ., தொலைவில் உள்ள சின்னசேலம் அல்லது சங்கராபுரம் தாலுகா அலுவலகங்களுக்கு வர வேண்டிய நிலை நீடிக்கிறது.இப்பகுதிக்கு சென்று வர போதிய பஸ் வசதிகளும் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே வெள்ளிமலை தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X