நரிக்குறவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நரிக்குறவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட நரிக்குறவர் இன மக்கள், நலத்திட்ட உதவி பெற நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நரிக்குறவர் இன மக்களுக்கு நல வாரியம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட நரிக்குறவர் இன மக்கள், நலத்திட்ட உதவி பெற நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நரிக்குறவர் இன மக்களுக்கு நல வாரியம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவி பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோன்று, விபத்தால் ஊனமடைந்தால் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு, இயற்கை மரணத்திற்கு 20 ஆயிரம், ஈமச்சடங்கிற்கு 5,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.மேலும், 10ம் வகுப்பு முதல் 12ம் வரை படிக்கும் பெண்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., தொழிற் பயிற்சிக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவி தொகை, முதியோர் உதவித் தொகை, தொழில் துவங்க உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அணுகி உறுப்பினராக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X