அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 கோடியில் பசுமை முதன்மையாளர் விருது

Added : செப் 03, 2021
Share
Advertisement
சட்டசபையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்: * வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் துறைக்கு, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் 20 கோடி ரூபாய் செலவில் பசுமை கட்டடம் கட்டப்படும்* சுற்றுச்சூழல் நலனில் அக்கறை உடைய நபர்களை தேர்வு செய்து, மாவட்ட

சட்டசபையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் துறைக்கு, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் 20 கோடி ரூபாய் செலவில் பசுமை கட்டடம் கட்டப்படும்

* சுற்றுச்சூழல் நலனில் அக்கறை உடைய நபர்களை தேர்வு செய்து, மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து, மாவட்டத்தின் பசுமை கனவுகளை நிறைவேற்றும் முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்படும்

* ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை நிறுவனம் வாயிலாக, தலா 10 கோடி ரூபாய் வீதம் இரண்டு கடற்கரைகளில், நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஐந்து ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல கடற்கரைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

* தொழிற்சாலைகளை இயக்குவதற்கு வழங்கப்படும் இசைவாணையை, ஆண்டுதோறும் வழங்குவதற்கு பதிலாக கால அளவை நீட்டித்து தொகுப்பாக வழங்கப்படும்

* சுற்றுச்சூழலை பாதுகாக்க முனைப்புடனும், முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர்மற்றும் நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்

* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை நவீனமயமாக்கும் வகையில் 32 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலியில்இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திற்கு, புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும்

* திருச்சி மண்டல அலுவலகத்தை பிரித்து, கடலுாரில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மண்டல அலுவலகம் உருவாக்கப்படும். மணலி, மேட்டூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம்ஏற்படுத்தப்படும்

* நீர்நிலைகளை பாதுகாக்க சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில், சென்னை மற்றும் சேலத்தில் இரண்டு பறக்கும் படை அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும்

* புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையில், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் 2 கோடி ரூபாய் செலவில்பசுமை பூங்கா அமைக்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X