பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டத்தை தவிர்க்க மாணவர்கள் நிறுத்தம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அரசு கல்லுாரி சேர்க்கை கவுன்சிலிங்கில் கூட்டத்தை தவிர்க்க, தேவையின்றி சென்ற மாணவர்கள் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.கடலுார் அரசு கல்லுாரியில் 2021--22ம் கல்வியாண்டு முதலாமாண்டில் 1,329 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதற்காக, 9,671 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, கடந்த 25ம் தேதி முதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி நடந்த அறிவியல்

கடலுார்-கடலுார் அரசு கல்லுாரி சேர்க்கை கவுன்சிலிங்கில் கூட்டத்தை தவிர்க்க, தேவையின்றி சென்ற மாணவர்கள் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடலுார் அரசு கல்லுாரியில் 2021--22ம் கல்வியாண்டு முதலாமாண்டில் 1,329 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதற்காக, 9,671 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, கடந்த 25ம் தேதி முதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி நடந்த அறிவியல் பாடத்திற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பெற்றோருடன் குவிந்தனர். கொரோனா பரவும் அச்சமும் ஏற்பட்டது. முதற்கட்ட கவுன்சிலிங் இன்றுடன் (4ம் தேதி) முடிய உள்ள நிலையில், நேற்றும் அதிகளவில் மாணவ, மாணவியர் வந்தனர். இதனால் கல்லுாரி செல்லும் வழியில், எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே தடுப்பு கட்டைகள் அமைத்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க சென்றவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X