சிறுமி  பாலியல் பலாத்காரம் 3 சிறுவர் போக்சோவில் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி  பாலியல் பலாத்காரம் 3 சிறுவர் போக்சோவில் கைது 

Added : செப் 03, 2021
Share
கடலுார்-சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 மாணவர்களை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவர், அம்பலவாணன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவர், அதே பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவர். இவர்கள் மூவரும், தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு பயிலும் 6 வயது

கடலுார்-சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 மாணவர்களை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவர், அம்பலவாணன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவர், அதே பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவர். இவர்கள் மூவரும், தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்கு சென்றனர். மூவரும் சிறுமியை துாக்கிச் சென்று அதே பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்தனர். பெற்றோர் கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, சிறுமி நடந்த சம்பவத்தை கூறினார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து 3 மாணவர்களையும் கைது செய்து, கடலுார் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X