பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் ரயில் மறியல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.,யினர் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருச்சி,சென்னை,ராமேஸ்வரம்,மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் செல்கின்றன.பெரும்பாலான ரயில்கள் மூன்றாவது பிளாட்பாரம் வழியாக செல்கிறது. மூன்றாவது பிளாட்பாரம் செல்ல பயணிகள்
 காரைக்குடியில் ரயில் மறியல்

காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி.,யினர் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருச்சி,சென்னை,ராமேஸ்வரம்,மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் செல்கின்றன.பெரும்பாலான ரயில்கள் மூன்றாவது பிளாட்பாரம் வழியாக செல்கிறது. மூன்றாவது பிளாட்பாரம் செல்ல பயணிகள் வெகுதுாரம் மேம்பாலத்தில் ஏறி கடக்கும் சூழல் உள்ளது. மேம்பாலத்தில் வயதானவர்கள் ஏறிச் செல்வது சிரமமாக உள்ளது.மூன்றாவது நடைமேடைக்கு, செல்ல பலரும், பழைய ரயில்நிலைய பாதையை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய ரயில்நிலைய பாதையை ரயில்வே நிர்வாகம் மூடியது. இதனை கண்டித்து, ஏ.ஐ.டி.யு.சி.,யினர் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் சமாதானகூட்டம் நடந்தது. அதில், ஓரிரு வாரத்தில் வழியை திறப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததால்,போராட்டம் கைவிடப்பட்டது.

பழைய ரயில்நிலைய பாதை திறக்கவில்லை. இதனை கண்டித்து, நேற்று காலை 8:30 மணிக்கு காரைக்குடி ரயில்நிலையம் வந்த திருச்சி ராமேஸ்வரம் ரயில் முன்பு படுத்து ஏ.ஐ.டி.யு.சி.,யினர் போராட்டம் நடத்தினர்.டி.எஸ்.பி., வினோஜி, ரயில்வே அதிகாரிகள் சமாதானம் பேசியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மறியல் செய்த, ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன் நகர ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன், செயலாளர் ராமராஜ், ஆட்டோசங்க தலைவர் கணேசன் உள்ளிட்ட 13 பேர் மீது காரைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X