அரசியல் செய்தி

தமிழ்நாடு

வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம்: சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:''அயோத்திதாசரின் 175வது ஆண்டு விழா நினைவாக, வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபையில் 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:தமிழக அரசியலை பொறுத்தவரை, தமிழன், திராவிடம் என்ற சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது. அடையாள சொல்இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாள சொல்லாக
 வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம்: சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:''அயோத்திதாசரின் 175வது ஆண்டு விழா நினைவாக, வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:தமிழக அரசியலை பொறுத்தவரை, தமிழன், திராவிடம் என்ற சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது.


அடையாள சொல்



இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாள சொல்லாக மாற்றியவர் தான், அறிவாயுதம் ஏந்திய அயோத்திதாச பண்டிதர்.கடந்த 1881ம் ஆண்டே மக்கள் தொகை கணக்கெடுப்பில், 'பூர்வத் தமிழர்' என பதிய சொன்னவர் பண்டிதர். 1891ல், 'திராவிட மகாஜன சபை' என்ற அமைப்பை துவக்கினார். கடந்த 1907ம் ஆண்டு, 'ஒரு பைசா தமிழன்' என்ற இதழை துவங்கி, அதையே தமிழன் என்ற இதழாக நடத்தி வந்தார். 'பூர்வீக சாதிபேதமற்ற திராவிடர்கள்' என அழைத்தவர். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது.

எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுனர், பன்மொழிப் புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என பன்முக ஆற்றலை கொண்டவர்.அவரது தாத்தா கந்தப்பன், தன்னிடம் இருந்த திருக்குறள் ஓலைச் சுவடிகளை, எல்லீஸ் என்பவரிடம் கொடுத்து, திருக்குறளை அச்சுப் பதிவாகக் கொண்டு வந்ததை நினைக்கும் போது, குறளுக்கு அவரது குடும்பம் ஆற்றிய தொண்டுக்காக நாம் அனைவரும் தலை வணங்க வேண்டும்.


'இரவு பகலற்ற ஒளி'

'இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும், மதமுமே தடை' எனக் கூறிய அயோத்திதாசர், 'மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவர் எவரோ, அவர் தான் மனிதர்' என முழங்கினார். கடந்த 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசரின் 175வது ஆண்டு விழாவின் நினைவாகவும், அவரது அறிவை வணங்கும் விதமாகவும், வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

மகான் புத்தரை, 'இரவு பகலற்ற ஒளி' எனச் சொன்ன அயோத்திதாச பண்டிதருடைய சிந்தனைகளும், இரவு பகலற்ற ஒளியாக இந்த தமிழ் சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் அறிவித்தார். முதல்வர் அறிவிப்பை வரவேற்று, புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், ம.தி.மு.க., சதன் திருமலைகுமார்.இந்திய கம்யூ., ராமச்சந்திரன், மார்க்., கம்யூனிஸ்ட் நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தனைச்செல்வன், பா.ஜ., நயினார் நாகேந்திரன், பா.ம.க., ஜி.கே.மணி, காங்., செல்வப்பெருந்தகை, அ.தி.மு.க., ராஜு ஆகியோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X