பொது செய்தி

தமிழ்நாடு

விளம்பர பலகைகள், 'பேனர்'கள் அகற்ற சுழலுது அரசின் சாட்டை

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழகம் முழுதும் ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை 20ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் கோபால், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதியின்றி ஏராளமான விளம்பர பலகைகள், பேனர்கள் பொது இடங்களிலும்,

சென்னை:'தமிழகம் முழுதும் ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை 20ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் கோபால், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதியின்றி ஏராளமான விளம்பர பலகைகள், பேனர்கள் பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை சட்ட விரோதமாக, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

மாநிலத்தின் சில இடங்களில் நடந்த சம்பவங்களால், சாலையில் சென்றவர்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர். எனவே, மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப் பட்டு உள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். இதற்காக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட அளவில் கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அந்தஸ்துள்ள அதிகாரியை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

மாவட்டத்தில் போலீஸ் எஸ்.பி., - மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி நிர்வாகம், தங்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில், அனுமதி பெற்றவை, அனுமதி பெறாதவை விபரங்களை சேகரித்து, மண்டல அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். கணக்கெடுப்பு பணியை முடித்த பின், வருவாய் துறை, காவல் துறையினர் உதவியோடு, அனுமதியில்லாத விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். இதன் விபரத்தை தினமும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள் போன்றவற்றை அகற்றும் பணியை, வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்; அகற்றும் பணியை புகைப்படம் எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X