கழிப்பறையில் வீணான வரிப்பணம் ரூ.10 லட்சம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பயன்பாடின்றி கிடைக்கும் 'நம்ம டாய்லெட்' கழிப்பறையால், மக்கள் வரிப்பணம் ரூ. 10 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் திறந்த வெளியில் இயற்கை உபாதை செல்வதை தடுத்து, சுகாதாரம் பராமரிக்க வேண்டி 4 ஆண்டுக்கு முன் ரூ. 10 லட்சம் செலவில் ஜெ.ஜெ., நகரில் நம்ம டாய்லெட் திட்டத்தில் கழிப்பறை கூடம் அமைத்தனர்.துவக்கத்தில் இக்கழிப்பறையை
கழிப்பறையில் வீணான வரிப்பணம் ரூ.10 லட்சம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பயன்பாடின்றி கிடைக்கும் 'நம்ம டாய்லெட்' கழிப்பறையால், மக்கள் வரிப்பணம் ரூ. 10 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் திறந்த வெளியில் இயற்கை உபாதை செல்வதை தடுத்து, சுகாதாரம் பராமரிக்க வேண்டி 4 ஆண்டுக்கு முன் ரூ. 10 லட்சம் செலவில் ஜெ.ஜெ., நகரில் நம்ம டாய்லெட் திட்டத்தில் கழிப்பறை கூடம் அமைத்தனர்.துவக்கத்தில் இக்கழிப்பறையை பராமரித்த நகராட்சி நிர்வாகம், காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டதால், கடந்த 3 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

கழிப்பறை கதவுகள், குழாய்கள் உடைந்தும், இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் பாராகவும் மாற்றி ரகளை செய்வதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மக்கள் வரிப்பணம் ரூ. 10 லட்சம் வீணாக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X