அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா எம்.பி.,யாக முகமது அப்துல்லா தேர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:ராஜ்யசபாஎம்.பி., பதவிக்கு, தி.மு.க., வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.தமிழகத்தில் இருந்து, 2019 ஜூலையில் அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மரண மடைந்தார்.அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்தஎம்.பி., பதவி காலியானது. பதவி காலம் நிறைவடைய நான்கு ஆண்டுகள் உள்ளன.இப்பதவிக்கு இடைத்தேர்தல்
  ராஜ்யசபா எம்.பி.,யாக  முகமது அப்துல்லா தேர்வு

சென்னை:ராஜ்யசபாஎம்.பி., பதவிக்கு, தி.மு.க., வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் இருந்து, 2019 ஜூலையில் அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மரண மடைந்தார்.அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்தஎம்.பி., பதவி காலியானது. பதவி காலம் நிறைவடைய நான்கு ஆண்டுகள் உள்ளன.இப்பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆக., 24ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. தி.மு.க., வேட்பாளர் முகமதுஅப்துல்லா மற்றும் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை, 3:00 மணி வரை, மனுக்களை வாபஸ் பெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிந்த பின், தி.மு.க., வேட்பாளர் முகமது அப்துல்லா, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக,தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டசபைசெயலர் சீனிவாசன் முறைப்படி அறிவித்தார். எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது அப்துல்லா, வெற்றி சான்றிதழுடன் முதல்வர்ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X