பொது செய்தி

தமிழ்நாடு

தரமற்ற பூச்சிக்கொல்லி விற்றால் நடவடிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை வட்டார வேளாண் உதவி இயக்குநர் வளர்மதிதெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ள

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை வட்டார வேளாண் உதவி இயக்குநர் வளர்மதிதெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கின்படி பூச்சிக்கொல்லி ஆய்வாளர்கள் விற்பனை கடைகளில் மாதிரிகளை சேகரிக்கின்றனர். இந்த மாதிரிகள் தேனி மாவட்டத்தில் உள்ள ஆய்வக குறியீட்டு மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

மாதிரிகளுக்கு குறியீடு வழங்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்காக பெறப்படுகிறது. தர நிலைகளை உறுதிப்படுத்துவதற்காக இயற்பியல், வேதியியல் ஆய்வுகள் இந்திய தர நிர்ணய விவரக்குறிப்பின்படி பரிசோதனை செய்யப்படுகிறது. வேதியியல் ஆய்வானது எரிவாயு திரவ குரோமடோகிராபி, உயர் செயல்திறன் குரோமவோகிராபி, யு.வி-விசிபிள் ஸ்பெக்ட்ரோஸ்கோபி போன்ற அதிநவீன கருவிகள் மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

இந்த பரிசோதனை மாதிரி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தரம் மற்றும் தரமற்ற மாதிரிகள் ஆய்வு முடிவுகள் பூச்சிக்கொல்லி ஆய்வாளர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மீது துறை மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், எனஅவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X