பேருந்தில் மாயமான 7 பவுன் செயின்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேருந்தில் மாயமான 7 பவுன் செயின்

Added : செப் 04, 2021
Share
காரைக்குடி : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஓடக்கரையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி இந்திராணி 50. இவரது பேத்தி காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பேத்தியை பள்ளி விடுதியில் சேர்ப்பதற்காக, இந்திராணி தனதுபேத்தியுடன் காரைக்குடிக்கு வந்துள்ளார். பேத்தியை விடுதியில் சேர்த்துவிட்டு, கல்லுாரிச்சாலையிலிருந்து புதிய பேருந்துநிலையத்திற்கு டவுன்

காரைக்குடி : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஓடக்கரையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி இந்திராணி 50. இவரது பேத்தி காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

பேத்தியை பள்ளி விடுதியில் சேர்ப்பதற்காக, இந்திராணி தனதுபேத்தியுடன் காரைக்குடிக்கு வந்துள்ளார். பேத்தியை விடுதியில் சேர்த்துவிட்டு, கல்லுாரிச்சாலையிலிருந்து புதிய பேருந்துநிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்துள்ளார். இறங்கும்போது, தனது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கசெயினை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X