'மாஜி' எம்.பி.,க்கு 'ஜாமின்' மறுப்பு

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு இடைக்கால ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் 1984ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக

புதுடில்லி : டில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு இடைக்கால ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.



latest tamil news


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் 1984ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் நடந்தது. இதில் 3,000த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு டில்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.உடல்நலக் குறைவு காரணமாக, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சஜ்ஜன் குமார் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். ஜாமின் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news


சஜ்ஜன் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'சஜ்ஜன் குமாரின் உடல் நிலை மோசமாகிஉள்ளது. 'அவர், தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற தயாராக உள்ளார். அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்' என்றார்.இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஜ்ஜன் குமாரின் உடல் நிலை சீராகஇருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க முடியாது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
04-செப்-202108:52:47 IST Report Abuse
duruvasar தண்டனை பெற்றால் எந்தெந்த காலங்களில் எந்தெந்த மாதிரியான வியாதிகள் வரவேண்டும், எந்த மாதிரியான சிகிச்சைகளை எங்கு பெறவேண்டும் என்பதற்கு லாலு பல்கலைகழகத்தில் படியுங்கள். சிதம்பரம், கபில்சிபல், அபிஷேக் சிங்வி போன்ற. உயரிய. பேராசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். படியுங்கள் ,சுதந்திர பறவைகளாக பறந்து செல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X