கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பிளிப்கார்ட்' பங்கு விற்பனையில் விதிமீறல்? அமலாக்க பிரிவு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை:வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பங்குகள் வழங்கியதில், 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவுக்கு விதிமீறல் நடந்ததாக, அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'பிளிப்கார்ட்' நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி வழக்கு தொடர்ந்து உள்ளார்.'நோட்டீஸ்'இந்த விதிமீறல் குறித்து 12 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க தவறியது ஏன் என, சென்னை உயர்

சென்னை:வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பங்குகள் வழங்கியதில், 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவுக்கு விதிமீறல் நடந்ததாக, அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'பிளிப்கார்ட்' நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி வழக்கு தொடர்ந்து உள்ளார்.


'நோட்டீஸ்'

இந்த விதிமீறல் குறித்து 12 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க தவறியது ஏன் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சச்சின் பன்சால் என்பவர் தாக்கல் செய்த மனு:இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தை துவங்கியவர்களில் நானும் ஒருவன்.

2018ல், பிளிப்கார்ட் நிறுவனத்தை, 'வால்மார்ட்' நிறுவனம் வாங்கியது.அதைத் தொடர்ந்து, எனக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்குமான தொடர்பு முடிந்து விட்டது.கடந்த, 2009 முதல் 2014 வரை, பிளிப்கார்ட் நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கியதில், வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கைகளை பின்பற்றவில்லை என, சென்னையில் உள்ள அமலாக்கப்பிரிவு எனக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு அளித்தேன். உரிய ஆவணங்களையும் வழங்கினேன். இந்நிலையில், வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையை மீறியதற்கு, தனிப்பட்ட முறையில் நான் பொறுப்பு என்று அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கேள்வி




அதில், 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவுக்கு விதிமீறல் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. பங்கு பரிவர்த்தனை நடந்து, 12 ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இந்த நோட்டீஸ்காலதாமதமாக அனுப்பப்பட்டுள்ளது. அதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.

விதிமீறல் தொடர்பாக, 12 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க அதிகாரி கள் தவறியது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.மனுவுக்கு, மூன்று வாரங்களில் பதில் அளிக்கும்படி, அமலாக்கப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X