குறைந்தழுத்த மின்சாரத்தால் வீட்டில் பொருட்கள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்தழுத்த மின்சாரத்தால் வீட்டில் பொருட்கள் பாதிப்பு

Added : செப் 04, 2021
Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மின்கம்பிகள் உரசி குறைவான மின்சப்ளையால் வீட்டில் உள்ள எலக்ட்ரிக் பொருட்கள் சேதமடைந்துள்ளது.கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்திற்கு முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது.கிராமத்தில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அவ்வப்போது ஏற்படும் குறைந்தழுத்த மின்சப்ளையால் வீட்டில் உள்ள எலக்ட்ரிக்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மின்கம்பிகள் உரசி குறைவான மின்சப்ளையால் வீட்டில் உள்ள எலக்ட்ரிக் பொருட்கள் சேதமடைந்துள்ளது.

கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்திற்கு முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது.கிராமத்தில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அவ்வப்போது ஏற்படும் குறைந்தழுத்த மின்சப்ளையால் வீட்டில் உள்ள எலக்ட்ரிக் பொருட்கள் சேதமடைந்துள்ளது.மின்சாரமும் சரிவர வரவில்லை.ஊராட்சி தலைவர் சண்முகவள்ளி கூறியதாவது,கீழக்காஞ்சிரங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மின்கம்பிகள் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.

சிலஇடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது காற்றில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி குறைந்தழுத்த மின் சப்ளை ஏற்படுகிறது.50 தெருவிளக்குகள், 20க்கும் மேற்பட்ட வீட்டில் உள்ள டிவி,மிக்ஸி உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்கள் சேதமடைந்துள்ளது.மின்பெட்டியும் தீப்பற்றி எரிந்துள்ளது.கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X