பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களில் சமூக இடைவெளி மாயம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பால், சமூக இடைவெளியின்றி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். செப்டம்பர் 1 முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், கல்லுாரி வகுப்புகளும் துவக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாணவ - மாணவியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர்.பள்ளி, கல்லுாரி துவங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தில், பஸ்களில் கடும் கூட்ட
 பஸ்களில் சமூக இடைவெளி மாயம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிப்பால், சமூக இடைவெளியின்றி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.

செப்டம்பர் 1 முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், கல்லுாரி வகுப்புகளும் துவக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாணவ - மாணவியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர்.பள்ளி, கல்லுாரி துவங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தில், பஸ்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. சமூக இடைவெளி இல்லாமல், ஒருவருக்கொருவர் நெருக்கியபடி பயணிக்கின்றனர். இதனால், மாணவ - மாணவியர் மட்டுமின்றி, பயணியரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால், கடந்த காலத்தை விட, பஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவில்லை. அதேநேரம், பல பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் நாங்கள், பஸ் வசதியின்றி அவதிக்குஉள்ளாகிறோம்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு, சமூக இடைவெளி ஆகியவை குறித்தெல்லாம் யோசிக்க கூட வாய்ப்பில்லை. வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தும் தமிழக அரசு, கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
04-செப்-202110:42:27 IST Report Abuse
R.RAMACHANDRAN அரசு அளிக்கும் மிதி வண்டிகளில் மாவை மாணவிகள் பள்ளி வந்தால் பேருந்துகளில் நெரிசல் இல்லாமல் மற்ற மாணவர்களும் மக்களும் பயணம் செய்யலாம்.மிதிவண்டிகளுக்கு அரசு செலவிடும் தொகையை வைத்து கூடுதலாக பேருந்துகள் வாங்கி காலை மற்றும் மாலையில் நெரிசல் நேரங்களில் மட்டும் அவைகளை கூடுதலாக விட்டு மக்கள் சுகமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யலாம்.இலவச மிதி வண்டிகளை பெற்றோர்கள்தான் பயன்படுத்துகின்றனர் அவர்கள் பிள்ளைகள் பேருந்துகளில் தொற்றிக்கொண்டு பயணிக்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X